தமிழ்நாட்டில் 7,000-க்கு கீழ் குறைந்த கொரோனா.. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 30 நாளுக்கும் மேலாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1,000 க்கும் கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

ஊரடங்குதான் காரணம்

ஊரடங்குதான் காரணம்

கொரோனாவை தடுக்க தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது கொரோனா 2-வது அலை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு சற்று அதிகரிப்பு

உயிரிழப்பு சற்று அதிகரிப்பு

இதனால் மொத்த பாதிப்பு 24,36,819 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 24 பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 19 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,580 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 13,156 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,48,353 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சென்னையில் பாதிப்பு என்ன?

சென்னையில் பாதிப்பு என்ன?

56,886 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,60,990 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,06,84,519 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 410 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 5-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. ஆனால் கோவையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு குறைந்து ஆறுதல் அளிக்கிறது.

கோவை முதலிடம்

கோவை முதலிடம்

கோவையில் மட்டும் 870 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 286 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், மதுரையில் 125 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 110 பேருக்கும், திருவள்ளூரில் 191 பேருக்கும், திருச்சியில் 231 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 434 பேருக்கும், விருதுநகரில் 98 பேருக்கும், ஈரோட்டில் 741 பேருக்கும், சேலத்தில் 485 பேருக்கும், நாமக்கல்லில் 274 பேருக்கும், தஞ்சாவூரில் 372 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+