அடுத்த டார்கெட் 6 அமைச்சர்கள்.. ஸ்டாலினின் நம்பர் 2 விற்கும் குறி.. டெல்லியின் மெகா திட்டம்.. போச்சு
சென்னை: பாஜகவை எப்படி வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அடித்து ஆடலாம். டிபன்ஸ் ஆடலாம். கொஞ்ச நாள் அமைதியாக இருக்கலாம். பாஜகவிற்கு அப்படி பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. இத்தனை காலம் ஸ்டாலின் அமைதியாக இருந்தார். இனி ஸ்டாலின் திருப்பி அடிப்பார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார் .
அமைச்சர் எ.வ வேலு இடங்களில் ஐந்தாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. திமுக தரப்பிற்கு இது பெரிய பிரஷரா மாறியுள்ளது.

இந்த ரெய்டு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், பாஜகவை எப்படி வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அடித்து ஆடலாம். டிபன்ஸ் ஆடலாம். கொஞ்ச நாள் அமைதியாக இருக்கலாம். பாஜகவிற்கு அப்படி பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. இத்தனை காலம் ஸ்டாலின் அமைதியாக இருந்தார். இனி ஸ்டாலின் திருப்பி அடிப்பார். ஏ. வ வேலுக்கு அடுத்து துரைமுருகனை அவர்கள் விசாரிக்க வாய்ப்பு உள்ளது. அவரிடம் ரெய்டு நடத்த வாய்ப்பு உள்ளது. அது திமுகவிற்கு மேலும் பிரஷரை கொடுக்கும். திமுக மீது திட்டமிட்ட தாக்குதலை டெல்லி நடத்துகிறது.

முறையாக திட்டமிட்டு.. திமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறது. அதில் இருந்து எப்படி தப்பிப்பது, பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். அதில் ஒரு ஐடியாதான் அமைச்சரவையை மாற்றுவது. தற்காலிகமாக அமைச்சரவையை மாற்றலாம். 2024ல் கண்டிப்பாக ஆட்சி மாறும். அதுவரை இப்படி செய்யலாம் என்று ஸ்டாலின் இருக்கிறார். மணல் கொள்ளை விஷயத்தில் தற்போது துரைமுருகன் பிடிக்கப்பட உள்ளார்.
ரெய்டு செய்கிறார்கள்: அடுத்து அவர்தான் ரெய்டுக்கு உள்ளவார் . திமுகவில் அவர்தான் நம்பர் 2. அவரை டெல்லி குறி வைக்கிறது. அதிமுக காலத்திலேயே டாஸ்மாக் முறைகேடு தொடங்கி மணல் முறைகேடு வரை எல்லாம் நடந்தது. அதிமுக காலத்தில் நடந்தது தற்போதும் அது தொடருகிறது. தற்போது இது திமுக என்பதால் அமலாக்கத்துறை உள்ளே வந்துள்ளது. அமலாக்கத்துறைக்கு பவர் உள்ளது என்பதால் அவர்கள் இதை கணக்கிடுகிறார்கள்.

துரைமுருகன் இதில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது வேறு பிரச்சனை. ஆனால் இதில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கும். அதிகாரிகளை கண்டிப்பாக விசாரிக்கும். அதன்பின் அமைச்சர்களுக்கு செல்வார்கள். அடுத்த ஆபத்து துரைமுருகனுக்கு இருக்கிறது. உள்ளே ஐஐடியை கொண்டு வந்துள்ளனர். ஐஐடி நிபுணர்களை வைத்து கூட இவர் விசாரிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஏற்கனவே உள்ளே வந்துவிட்டனர். அடுத்து மூத்த அமைச்சர்கள் பலர் விசாரிக்கப்படலாம்.

கே. என் நேரு மீது விசாரணை அடுத்து நடக்கலாம். கேகேஎஸ்எஸ்ஆர் மீதும் விசாரணை நடத்தப்படலாம் . ஐ பெரியசாமி ஆகியோர் மீதும் விசாரணை நடக்கலாம். பொன்முடி, துரைமுருகன், கே. என் நேரு, ஐ பெரியசாமி, ஏவவேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகிய 6 பேர் சிக்கலில் உள்ளனர். இவர்கள் 6 பேர் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்குழு இறங்கலாம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications