"சபலம்".. அழகியிடம் கிறங்கிய "புள்ளி".. நிர்வாணப்படுத்தி நகை போட்டு அழகு பார்ப்பாராம்.. மானமே போச்சு
மாடல் அழகி ஸ்வாதிக்கு தொழிலதிபர் 600 சவரன் நகை பரிசாக கொடுத்தாராம்
சென்னை: மாடல் அழகியின் அழகில் மயங்கி விழுந்த தொழிலதிபர் சேகர், பரிசாக கொடுத்த பொருட்களை எல்லாம் கேள்விப்பட்டு மிரண்டு கிடக்கிறார்கள் சென்னை போலீசார்.. இப்போது 2 தனிப்படைகள் விரைந்துள்ளன.
சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர்.. 47 வயதாகிறது.. இவர் ஒரு தொழில் அதிபர்... பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதைதவிர, பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்... இவருடன் சண்டை போட்டுக் கொண்டு, இவரது மனைவி 2 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார்.. அந்த கேப்பில்தான், ஒரு மாடல் அழகி மீது சேகருக்கு சபலம் வந்துள்ளது.. அந்த அழகியின் பெயர் சுவாதி.. 22 வயதாகிறது.

சபலம்
சபலம் உச்சக்கட்டத்துக்கு போய்விட்டதால், அந்த பெண்ணுக்கு கண்மண் தெரியாமல் செலவு செய்துள்ளார் சேகர்.. தன்னுடைய அம்மா, மனைவி, மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மொத்தம் 550 பவுன் நகையை சொந்த வீட்டிலேயே ஆட்டைய போட்டுள்ளார்.. இந்த நகைகளை எல்லாம் மாடல் அழகி சுவாதியின் காலடியில் வைத்துள்ளார்.. அதுமட்டுமல்ல, காஸ்ட்லி கார் தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ரூ.30 லட்சம் பணம் தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ரூ.10 லட்சத்துக்கு பைக் வாங்கி தந்துள்ளார்.. இவ்வளவும் ஸ்வாதிக்கு தந்த "கள்ளக்காதல் பரிசு".

டவுட் வந்த அம்மா
பிறகு, சண்டை போட்டுக் கொண்டு வந்த போன மனைவி, வீட்டுக்கு வந்து பார்த்தால், பீரோவில் நகைகளை காணவில்லை.. அதேபோல, நகைகள் ஒவ்வொன்றாக திடீர் திடீரென காணாமல் போவது சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து, கடைசியில் சேகரின் அம்மாவே, பூந்தமல்லி போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் சேகர், சுவாதி இருவரையும் கைது செய்து ஜெயிலிலும் அடைத்தனர்.. பிறகு சுவாதியிடம் விசாரணை நடந்தது.. ஒன்றுவிடாமல் நடந்ததையெல்லாம் வாக்குமூலமாக சொல்ல ஆரம்பித்தார் சுவாதி.

ஜொலிஜொலிப்பு
"என் அழகில் சேகர் மயங்கியே விட்டார்.. அவரது வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வந்து எனக்கு அணிவித்து அழகு பார்ப்பார்... என்னை நிர்வாணப்படுத்தி, அந்த நகைகளை போட்டு அழகு பார்ப்பார். பிறகு, அந்த நகைகளை எனக்கே கொடுத்து விடுவார்... எனக்கு ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளது. சேகர் கொடுத்த நகைகளை எல்லாம் விற்று ஸ்டார் ஓட்டலில் மது அருந்தினேன்.. சேகர் வாங்கி கொடுத்த நகைகள், காஸ்ட்லி பைக், பணம் இது எதுவுமே என்னிடம் இல்லை.. எனக்கு ஒரு காதலன் இருக்கிறான்.. அவன் பெயர் ஜெரீன்..

ஜாலி டூர்
அவனிடம் அனைத்தையும் தந்துவிட்டேன்.. தம்பி மனைவியின் 300 சவரன் தங்க நகைகள், அம்மாவின் 200 சவரன் தங்க நகைகள், 100 கிராம் எடையுள்ள 7 தங்கக் கட்டிகள், லட்சக்கணக்கான பணம் இவைகளை என்னிடம் தந்தார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை சேகரின் குடும்பத்தினரே என்னை மிரட்டி வாங்கிக் கொண்டனர்... மீதமுள்ள தங்க நகைகளையும், பணத்தையும், காதலன் ஜெரீனிடம் தந்தேன்.. அதற்கு பிறகு, சேகர் தந்த லட்சக்கணக்கான பணத்தில், நானும் ஜெரீனும், மாலத்தீவு, கோவா என்று ஜாலி டூர் சென்றோம்..

தாய்லாந்து
அப்போது கொஞ்சம் பணம் செலவாகிவிட்டது.. சேகர் தந்த பைக்கில், ஊர் சுற்றி வந்தோம்.. ஆனால், அந்த நகை எதுவும் என்னிடம் இப்போது இல்லை.. ஜெரீனிடம் உள்ளது.. என்னுடன் ஜாலியாக பொழுதைக் கழித்த மகிழ்ச்சியில் சேகர் எனக்கு கொடுத்த கட்டணம் மற்றும் பரிசை திருப்பிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை.. ஜெரீனுடன் சென்றதுபோலவே, கோவா, ஊட்டி போன்ற இடங்களுக்கும் சேகருடனும் ஜாலியாக ஊர் சுற்றி வந்தேன்.. தாய்லாந்துக்கு கூட போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் சேகர் செய்துவிட்டார்.. அதற்குள் போலீசில் சிக்கிவிட்டோம்" என்றார் சுவாதி.

வளசரவாக்கம்
இதையடுத்து, போலீசார், புது கேரக்டரான அந்த ஜெரீன் வீட்டிற்கு சென்றனர்.. வளசரவாக்கத்தில் அவர் வீடு உள்ளது.. அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையும் மேற்கொண்டனர். சேகர் வீட்டில், சுவாதிக்கு ஆசையாக சேகர் வாங்கி கொடுத்த ரூ.10 லட்சம் பைக் உட்பட 2 வாகனங்கள் இருந்துள்ளன.. அந்த வாகனங்கள் உட்பட 100 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.. சேகரிடம், சுவாதி தந்தது கிட்டத்தட்ட 550 சவரன் இருக்குமாம்.. இப்போதைக்கு 100 பவுன் மட்டும்தான் சிக்கி உள்ளது.. மீதம் 450 பவுன் நகையையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்...

சபலம்
ஆனால், போலீசார் தன்வீட்டிற்கு வரப்போவது முன்கூட்டியே அறிந்த ஜெரீன் எஸ்கேப் ஆகிவிட்டார்.. இந்த ஜெரீன் ஒரு பிளேபாய் என்கிறார்கள்.. வசதியான வீட்டுப்பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, நெருங்கி பழகி பணம் பறிப்பவர்... அதிலும், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மனைவி, குடும்ப பிரச்சினையில் சிக்கி தவிக்கும் வசதியான வீட்டுப்பெண்கள், கணவரை பிரிந்து வாழும் வசதியான பெண்கள் என இவர்களை மட்டுமே குறி வைத்து அவர்களிடம் நெருங்கி பழகுவார்.. அந்த பெண்களிடம் ஆதரவு வார்த்தைகளை சொல்லி, கலர் கலராக வசனங்களை பேசி தன் வலையில் விழ வைப்பார்..

கலர் கலர் பொய்
இதில் இளம்வயது பெண்கள் என்றால், அதிலும் அழகான பெண்கள் சிக்கினால், அவர்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுவாராம்.. மேலும் அந்த பெண்களை மிரட்டியும் நகை, பணத்தை பறித்து வந்துள்ளார்... இப்போது சுவாதி கொடுத்த நகை, பணம் இன்னும் ஏராளம்.. அவையெல்லாம் எங்கே என்று தெரியவில்லை.. தலைமறைவாக ஜெரீன் இருப்பதால், அவர் சிக்கினால்தான், அவையெல்லாம் எங்கே இருக்கின்றன என்று தெரியவரும்..

அட்டூழியம்
இவ்வளவு அட்டூழியம் செய்த 22 வயதான சுவாதிக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. ஒரு குழந்தையும் இருக்கிறதாம்.. சுவாதியின் கணவர், தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில், உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஜெர்ரியை தேடி வருகின்றனர். அவரோ, போலீசுக்கு பயந்து, ஓடி, ஓடி ஒளிந்து வருகிறார். தனிப்படையும், அவரை விடாமல் துரத்துகிறது. ஓரிரு நாளில்,ஜெர்ரி சிக்கிவிடுவார், அவரிடம் உள்ள மீதமுள்ள நகையை பறிமுதல் செய்துவிடுவோம் என முத்துவேல் பாண்டியன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல்
அதே ஹோட்டலில் சுவாதியின் ஆண் நண்பர்கள் வந்துள்ளனர். சுவாதிதான் தகவல் கொடுத்துள்ளார். இது சேகருக்கு பிடிக்கவில்லை. தங்க முட்டை போடும் வாத்தை பகைத்துக்கொள்ள கூடாது என்று சேகரை சுவாதி அப்போது சமாதானப்படுத்தி உள்ளார். ஆனாலும், சுவாதி ஆண் நண்பர்களுடனான பழக்கத்தை நிறுத்திக்கொள்ளவில்லை... சேகர், சுவாதியிடம் பழகும் விவகாரம் சேகர் வீட்டாருக்கு ஏற்கனவே தெரிந்தும்கூட, அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்களாம்.. ஆனால், நகை காணாமல் போன பிறகுதான் அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications