சென்னையில் மின்சார ரயிலில் போவீங்களா.. 66 ரயில்கள் ரத்து.. சிறப்பு ரயில் நேரத்தை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று 8 மின்சார ரயில்களும், நாளை 58 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இன்று (சனிக்கிழமை) 8 ரயில்களும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 58 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

66 electric trains canceled on Chennai central-Arakkonam route: Southern Railway

தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூர், திருத்தணி செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் சனிக்கிழமை இரவு செல்லும் 6 ரயில்களும், அரக்கோணம், திருத்தணியிலிருந்து இரவு புறப்படும் தலா ஒரு ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரலில் பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயிலும், அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 7.55 மணிக்கு வரும் ரயிலும் ஆவடியுடன் நிறுத்தப்படும்.

தொடர்ந்து, சென்னை சென்ட்ரல், கடற்கரை - ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, பொன்னேரி இடையே அதிகாலை முதல் காலை 10 மணி வரை இயக்கப்படும் 58 மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதாவது சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு நவம்பர் 4ம் தேதியான இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு 10.20, 11.45 மணிக்கு புறப்படும் ரயில், மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது

அதேநேரம் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரலிலிருந்து திருத்தணிக்கு அதிகாலை 3.30, காலை 7.40 மணிக்கும், பட்டாபிராமுக்கு அதிகாலை 4.15 மணிக்கும், திருவள்ளூருக்கு அதிகாலை 4.30, காலை 8.40, 9.15, 10 .00 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அரக்கோணத்துக்கு காலை 6.30, 7.00, 8.20, 9.10, 9.50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமார்க்கமாக அரக்கோணத்திலிருந்து காலை 5.25, 6.20, 6.40, 7.10, 8.00, 8.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ஆவடியிலிருந்து அதிகாலை 3.50, 4.25, 4.35, காலை 6.40 மணிக்கும், திருத்தணியில் இருந்து காலை 6.30, 7.00, 8.50 மணிக்கும், திருவள்ளூரிலிருந்து காலை 6.50, காலை 7.15, காலை 7.40, காலை 9.10, காலை 9.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வே தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+