புது உச்சம்.. தமிழகத்தில் தீயாக பரவும் கொரோனா.. 6785 பேர் பாதிப்பு.. 21வது நாளாக அசத்தும் சென்னை
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
கொரோனா கட்டுக்குள் அடங்காமல் போய்க் கொண்டிருப்பதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது. இதோ விவரம்:

பரிசோதனைகள்
தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 22,23,019 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 6,504 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை 1,43,297 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,132 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையில் இன்று புதிதாக 1,299 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தமாக 92,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,969 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை பொறுத்த அளவில் 21வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 88 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களில், அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டத்தில் இன்று 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்ட நிலவரம்
சென்னை - 1299, விருதுநகர் - 424, செங்கல்பட்டு - 419, திருவள்ளூர் - 378, காஞ்சிபுரம் - 349, மதுரை - 326, தூத்துக்குடி - 313, குமரி -266, தேனி -234, ராணிப்பேட்டை - 222, திருச்சி - 217, கோவை - 189, தஞ்சை-186, கள்ளக் குறிச்சி-179, வேலூர் -174, நெல்லை-171 போன்றவை, அதிகம் கொரோனா பரவல் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications