மக்களே உஷார்.. தமிழகத்தில் நாளுக்கு, நாள் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியது
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள்
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது.

இன்று 7,819 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,970 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 3,464 பேர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?
இதுவரை மொத்தம் 8,87,663 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 54,315 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 96,513 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,04,50,554 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு
சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 2,564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 772 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 540 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 124 பேருக்கும், மதுரையில் 199 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications