சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையை அடுத்தடுத்து 7 புயல்கள் தாக்கப்போகிறதா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்... இன்று முதல் மீண்டும் மழை- வீடியோ

    சென்னை: சென்னையை, 7 புயல்கள் தாக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் உலவும் செய்திகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

    சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், 7 புயல்கள் சென்னையை தாக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    7 cyclones will not hit Chennai says meteorological

    இதற்கு பதிலளித்த, பாலச்சந்திரன், "இவ்வாறான தகவல்களில் உண்மை கிடையாது. வங்கக் கடலில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக மட்டுமே வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 20ம் தேதிவரை பெய்த மழை அளவு, வழக்கமாக இதே காலகட்டத்தின், இயல்பை விட 20 சதவீதம் குறைவாகும். சென்னையில், 60 சதவீத மழைப் பற்றாக்குறை உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    7 cyclones may hit Chennai says social media, but Chennai meteorological denies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X