"ஜாக்ரதை".. விஜயகாந்துக்கு இது தெரியுமா.. எடப்பாடிக்கு தேவையா.. சீறிய வாரிசு.. மெல்ல சிரித்த "அண்ணி"
எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்து பேசியுள்ளார் விஜயபிரபாகரன்
சென்னை: விஜயகாந்த் கட்சியை சீண்டி பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு, அக்கட்சியின் சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.. இதை மற்ற கட்சிகள் திரும்பி பார்த்து வருகின்றன.
தற்போது அதிமுகவில் உச்சக்கட்ட விவகாரம் சென்று கொண்டிருக்கிறது.. எனவே, ஓபிஎஸ் சில தினங்களுக்கு முன்பு மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசினார்.
ஆனால், அதிமுகவிற்கு எதிராக அறிக்கை விட்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை, எடப்பாடி பழனிச்சாமி 2 தினங்களுக்கு முன்பு மேடையிலேயே கடுமையாக விமர்சனம் செய்தார்.

விஜயகாந்த் + பூரிப்பு
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அவர்களையே விமர்சித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அதன்பிறகு பாமகவுக்கு சென்று எம்எல்ஏவாகி யானையின் மீது சென்றார்... அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்றார். பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிகவுக்கு சென்ற பிறகு, விஜயகாந்தின் தேமுதிக படுத்தே விட்டது... கட்சியை மூழ்கடித்து விட்டார்.. உங்களது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை, தயவு செய்து குறை சொல்லாமல் இருங்கள். இல்லையென்றால் சென்றுவிடுங்கள்... நீங்கள் கட்சியின் கிளை செயலாளராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்" என்று கடுமையான விமர்சனத்தை எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்தார். இதற்குதான் தேமுதிக எதிர்வினையாற்றி உள்ளது..

விஜயகாந்த்
சமீபத்தில் 70வது பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்தை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள் உள்ளனர்.. இதே மகிழ்ச்சியில் அக்கட்சியின் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடத்தப்படுகின்றன.. அந்தவகையில், தேமுதிகவின் முப்பெரும் விழா பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் திரண்டிருந்த தேமுதிக தொண்டர்களிடம் ஆவேசமான பேசினார், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.. அவரது பேச்சை கேட்டு தொண்டர்களும் நிர்வாகிகளும் கைகளை தட்டி உற்சாகமூட்டினார்கள்.. அதேபோல மகன் பேசுவதை, பூரித்து போய் சிரித்தபடியே பெருமிதமாய், பார்த்து கொண்டிருந்தார் மேடையில் அமர்ந்திருந்த பிரேமலதா... அங்கே விஜயபிரபாகரன் பேசியது இதுதான்:

எம்ஜிஆர்
"ஜான்சி ராணி குழந்தையை முதுகில் சுமந்துக்கொண்டு குதிரையை ஓட்டிக்கொண்டு வருவார்.. ஆனால்., இங்கே கேப்டனை அள்ளி தோளில் சுமந்து கொண்டு வருகிறது தேமுதிக என்ற கட்சி.. விஜயகாந்த் என்ற நபரால் மட்டுமே தேமுதிக உருவாக்கப்பட்டதாக இன்னைக்கு அனைத்து அரசியல் விமர்சகர்களும் சொல்கிறார்கள், விஜயகாந்த்துக்கு பிறகு அந்த கட்சி காணாமல் போய்விட்டது என்றும் சொல்கிறார்கள்.. அப்படி பார்த்தால் அண்ணா இருக்கும்வரைதான் திமுக, எம்ஜிஆர் இருக்கும்வரைதான் அதிமுக என்று எடுத்துக் கொள்வதா?

ஈபிஎஸ் அண்ணன்
ஈபிஎஸ், அதாவது மரியாதைக்குரிய எடப்பாடி அண்ணன்.. இல்லேன்னா மரியாதைக்குறைவாக நான் பேசிட்டேன்னு சொல்லுவாங்க.. பண்ருட்டியாரை பற்றி எடப்பாடி அண்ணன் விமர்சித்துள்ளார்.. பண்ருட்டியார் பாமகவுக்கு போனார், தேமுதிகவுக்கு போனார், இன்னைக்கு அதிமுகவில் அவர் இருக்கிறாரா, இல்லையா என்றே தெரியவில்லை என்று சொல்லி உள்ளார்.. எந்த லட்சணத்தில் கட்சியை நீங்கள் நடத்தி கொண்டிருக்கிறீர்கள்? ஒருத்தர் உங்க கட்சியில் இருக்கிறாரா? இல்லையா என்று கூட தெரியாமல் கட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்..

வாய் நீளம்
அன்னைக்கு பாமகதான் முக்கியம் என்று நீங்க அத்தனை சீட் தந்தீங்க.. ஆனால் பாருங்க பாமக தொண்டர்களே, இதோ உங்களையே தூக்கி போட்டுட்டாரு.. இவரா உங்களை காப்பாற்ற போகிறார்? முதலில் அதிமுக தொண்டர்களே, நீங்கள் சிந்தியுங்கள், எடப்பாடி உங்களை காப்பாற்ற போகிறாரா என்று? கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு பக்குவம் இல்லை என்று சொன்னார்.. ஆனால், இந்த செகண்ட் வரை இவருக்குதான் பக்குவம் இல்லை.. என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.. இதை சொன்னால், விஜயபிரபாரகனுக்கு சின்ன வயசு, வாய் நீளம்ன்னு சொல்றாங்க.. நான் ரொம்ப பேசவில்லை.. ஆனால், உண்மையை பேசுகிறேன்.. நான் மட்டும் பேசவில்லை.. இந்த உலகமே பேசுது உங்களை பார்த்து.

கெத்து + பிரபலம்
டேபிளுக்கு கீழே விழுந்து அன்னைக்கு ஆட்சியை பிடித்தீர்கள்.. இன்னைக்கு வந்து நான் பெரிய தலைவர் என்று வாய் சவடால் பேசக்கூடாது, களத்தில் இறங்க வேண்டும். நான் பெரிய ஆள் இல்லை என்று நீங்களே சொல்லுகிறீர்கள்.. அப்பறம் எப்படி மக்கள் சொல்வார்கள்? முதலில் நம் மீது நமக்குதான் தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.. அந்த வகையில் எங்கள் தேமுதிக கெத்து எங்களுக்கு தெரியும்.. உங்க கெத்து உங்களுக்கு தெரியுமா? நான் ஒன்றும் அந்த அளவுக்கு பிரபலம் இல்லை என்று நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள்.. பிரபலம் இல்லை என்றால் அப்பறம் ஏன் வர்றீங்க? தொண்டனாகவே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே?

தேமுதிக
ஏன் தலைமைப்பதவிக்கு ஆசைப்படறீங்க? இதையெல்லாம் அதிமுக தொண்டர்கள்தான் கேள்வி கேட்கணும்.. நான் என்ன கேட்கிறேன் என்றால், தேவையில்லாமல் தேமுதிகவை இவர் ஏன் இழுக்கணும்? ஏன் எங்களை சீண்டிப்பார்க்கிறீங்க? நாங்க தூரமாக இருப்பதால், பேச மாட்டோம் என்று நினைத்து கொண்டீர்களா? கேப்டன் ரத்தம் எனக்கு மட்டுமல்ல, இங்கேயுள்ள ஒவ்வொரு தொண்டனுக்குள்ளேயும் இருக்கு.. அதனால், சீண்டிப்பார்க்காதீங்க" என்றார் விஜயபிரபாகரன்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications