தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி.. கள்ளக்குறிச்சியில் 78 போலீசார் கூண்டோடு மாற்றம்
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் எதிரொலியாக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையிலும் பல நடவடிக்கைகள் பாய்ந்தன. இந்த நிலையில், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 78 போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 65 போ் உயிாிழந்தனா். தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதையும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் தமிழக அரசை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்தன.

கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடனேயே, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்க பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன், திருக்கோவிலூா் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமாா் உள்பட 9 போலீசார் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுா்வேதி நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 78 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரஜத் சதுா்வேதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன்படி உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிாிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அலெக்ஸ், திருநாவலூா் போலீஸ் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிாிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுருகன்,
மணலூா்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் ராஜசேகரன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிாிவிற்கும், உளுந்தூா்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் பிரபாவதி, உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிாிவிற்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் ஏழுமலை திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்க பிாிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிாிவில் பணியாற்றி வந்த 14 போலீசாா், உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிாிவில் பணியாற்றி வந்த 10 போலீசாா், திருக்கோவிலூா் மதுவிலக்கு அமலாக்க பிாிவில் பணியாற்றி வந்த 10 போலீசாா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 39 போலீசாா், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிாிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications