ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? டிஏ உயர்வால் என்ன நடக்கும்?
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று 2 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கியது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அடிப்படை ஊதியத்தில் தற்போதைய 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை பார்ப்போம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 2 சதவீதம் உயர்த்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

இதற்காக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,614.04 கோடி கூடுதல் செலவாகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுமார் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு தாமதமானதால், ஏப்ரல் மாத சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி முந்தைய மூன்று மாதங்களுக்கான (ஜனவரி-மார்ச் 2025) நிலுவைத் தொகையுடன் சேர்த்து கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
7வது சம்பளக் குழு அகவிலைப்படி உயர்வு காரணமாக சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 2 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியுள்ளதன் காரணமாகக, மாதத்திற்கு ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் தொடக்க நிலை மத்திய அரசு ஊழியரின் சம்பளம், ஜனவரி 1, 2025 முதல் மாதத்திற்கு ரூ.360 சம்பளம் அதிகமாக உயரும்.
ஒருவரின் சம்பளம் மாதத்திற்கு ரூ.30,000 ஆக இருந்து, அடிப்படை சம்பளமாக ரூ.18,000 இருந்தால், அவர் இப்போது ரூ.9,540 அகவிலைப்படியைப் பெறுகிறார், இது அடிப்படை சம்பளத்தில் 53 சதவீதம் ஆகும். இருப்பினும், எதிர்பார்க்கப்படும் 2 சதவீத உயர்வுக்குப் பிறகு, ஊழியருக்கு மாதத்திற்கு ரூ.9,900 கிடைக்கும். அதாவது வழக்கமாக வாங்கும் ஊதியத்தை விட ரூ.360 கூடுதலாக கிடைக்கும். ஒருவேளை 3 சதவீத அகவிலைப்படி உயர்வு ஏற்பட்டிருந்தால் ஊழியருக்கு ரூ.540 அகவிலைப்படி அதிகரித்து மாதத்திற்கு ரூ.10,080 ஆக உயரும்.
7வது ஊதியக் குழு: முந்தைய அகவிலைப்படி உயர்வு
2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட முந்தைய அகவிலைப்படி உயர்வு எப்படி இருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி 2024 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வைப் பெற்றனர். இந்த உயர்விற்குப் பிறகு, அகவிலைப்படி 50 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக அதிகரித்திருந்தது. ஓய்வூதியதாரர்களும் அதே அகவிலைப்படி நிவாரணத்தைப் பெற்றனர். ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி மற்றும் ஜூலை முதல் அமலுக்கு வரும்) அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு, பணவீக்க விகிதத்தின்படி மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்து வருகிறது. அதன்படியே ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஜூன் 2022 உடன் முடிவடையும் காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) 12 மாத சராசரி சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் அகவிலைப்படியை திருத்தியமைத்தாலும், இந்த முடிவு பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டுமே அறிவிக்கப்படும்.
2006 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவைக் கணக்கிடுவதற்கான பார்முலாவை மத்திய அரசு திருத்தியது. அதன் விவரம்:
அகவிலைப்படி சதவீதம் = ((அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களுக்கான -115.76)/115.76)x100.
மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: அகவிலைப்படி சதவீதம் = ((அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களுக்கான -126.33)/126.33)x100.
நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட குறிப்பில், 8வது சம்பளக் குழு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்படும் என்றும், அதன் அறிக்கை 2026 அல்லது 2027 இல் செயல்படுத்தப்படும் என்றும் கணித்திருந்தது
2026 அல்லது 2027 ஆம் ஆண்டுகளில் 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் சராசரி சம்பளம் மாதத்திற்கு ரூ.14,000-19,000 வரை உயர வாய்ப்புள்ளது என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் அமைப்பு கணித்துள்ளது. இது அவர்களின் தற்போதைய சராசரி மாத சம்பளம் (வரிக்கு முந்தைய) ரூ.1 லட்சத்தை விட 14-19% அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications