திருவண்ணாமலை மக்களுக்கு குட் நியூஸ்! மே 23ம் தேதி முதல் கிளாம்பாக்கம் போக தேவையில்லை! ஏன் என்னாச்சு?
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23 ஆம் தேதி தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பயணிகளும், கோயம்பேடு சந்தை, சுற்றுவட்டார பகுதிகளில பணியாற்றும் பயணிகளும் திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் சென்று அங்கிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பேருந்துகளில் பயணிப்பதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளையும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்களுடைய கோரிக்கையை தமிழக போக்குவரத்து துறை ஏற்றது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23 ஆம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் வரவேற்றுள்ளனர்.
போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், சென்னை-கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 44 பேருந்துகள், ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும். இந்த பேருந்து வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் பேருந்து பயணிகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மாநகர பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோ, டாக்ஸிகளுக்கு பணம் செலவு செய்து செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது.
தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் திருவண்ணாமலைக்கு இனி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications