மிஸ் பண்ணிடாதீங்க.. 8ம் வகுப்பு தனித்தேர்வு... விண்ணப்பிக்க இன்றே கடைசி.. கட்டணம், முகவரி இதுதான்
சென்னை: 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.. இந்த தேர்வை எழுதும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூடுதல் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் கடந்த ஜுன் மாதம் துவங்கப்பட்டது.. பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்குப் பாடப்புத்தகம், சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே, பள்ளி திறந்த முதல் நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்குப் பாடப்புத்தகம், சீருடை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன..
அரசின் இந்த உதவிக்கு மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்றி தெரிவித்திருந்தனர்.. முதல் நாளிலேயே இவ்வாறு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளமைக்கு மாணவிகளும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இது, மாணவர்கள் உற்சாகமாகக் கல்வி பயில உதவியாக இருப்பதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
அந்தவகையில், நடப்பு கல்வியாண்டுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.. அதன்படி நடப்பாண்டு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் அதாவது ஜூலை 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை தரப்பிலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.. அந்த அறிவிப்பில், "தனித்தேர்வர்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இடம்பெற்றுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.195 செலுத்த வேண்டும்.
இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 18, 19-ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications