8ம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர்னு அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி.. இதை உடனே நோட் பண்ணுங்க.. நிம்மதி
சென்னை: 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. இது மிகுந்த நிம்மதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு திட்டம் என்பது பள்ளிகளில் இடைநிற்றலை தடுப்பதற்காகவும், வருவாயில் பின்தங்கிய அளவில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு 8ம் வகுப்பில் தேர்வு நடத்தி, திறன் அடிப்படையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வருடந்தோறும் உதவித்தொகை வழங்குவதற்காக தேசியளவில் நடைபெறும் ஒரு தேர்வாகும்.

மாணவர்கள்: இதற்கு மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் மூன்றரை லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்... அதேபோல, மாணவர்கள் 7ம் வகுப்பில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அவர்கள் தொடர்ந்து அரசு பள்ளியிலோ அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளிலோ படித்தவராக இருக்க வேண்டும். நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதில் பங்குபெற கூடாது. 8ம் வகுப்பில் தேர்வு நடத்தப்பட்டு, 9 முதல் 12 வகுப்புகள் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் இடைநிற்றலின்றி கல்வியைத் தொடர அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
விண்ணப்பம்: அந்தவகையில் இந்த 2023-2024 கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்புதவித்தொகைத் திட்டத் தேர்வு (NMMS), வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://.dge1.2tn.gov.in என்ற இணையதளத்தில் ஜனவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிப்பும் வெளியாகியிருந்தது..
ஒத்திவைப்பு: பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூபாய் 50 தேர்வு கட்டணத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஜனவரி 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக, வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் நிலவி வந்தது... அதனால், இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.. அதன்படி, தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற டிசம்பர் 27-ம் தேதிக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications