15,000 வருடம் பழையது.. உலகையே திரும்பி பார்க்க வைக்கும் பூம்புகார் துறைமுக நகரம்.. என்ன சிறப்பு?
பூம்புகாரில் கடலுக்கு அடியில் 250 சதுர கி.மீட்டரில் ஒரு துறைமுக நகரமே தென்பட்டது.
சென்னை: 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு - முன்தோன்றிய மூத்த குடி'என்ற பழமொழி ஒன்றை வைத்தே தமிழர்கள் 2,500 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தைக் கொண்டவர்கள் என மேடை தோறும் காலங்காலமாகப் பலர் பேசி வருகிறார்கள்.
இதற்கு எல்லாம் என்ன அறிவியல் சான்றுகள் உள்ளன? ஆகவே இவை யாவும் கட்டுக்கதைகள்தானே ஒழிய, வரலாற்று உண்மைகள் இல்லை என்று மறு தரப்பு, மறுப்பு தெரிவித்து வருகிறது.

தொல்லியல் துறையை நவீனமாக்கிய முதல்வர் ஸ்டாலின்:
இந்தியாவில் பழமையான வரலாற்றுச் சான்றுகள் உள்ள ஓர் இனம் தமிழினம் என்பதைப் பல வெளிநாட்டு அறிஞர்கள் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அவற்றை இந்திய ஆய்வாளர்கள் ஏற்பதில்தான் பல மனத்தடைகள் உள்ளன. அதற்குள் பல்வேறு அரசியல் காரணங்களும் உள்ளன.
பழமையான பல இலக்கிய சான்றுகள் கொண்ட தமிழ் மொழிக்குப் போராடித்தான் செம்மொழி உரிமையைப் பெற்றுத்தர வேண்டி உள்ளது. இந்திய அளவில் காலத்தால் முந்தைய கல்வெட்டு ஆதாரங்கள் கொண்ட ஒரே மொழியாகத் தமிழ்நாடுதான் இருந்து வருகிறது.
ஆனால், அந்தக் கல்வெட்டுக்கள் அனைத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கர்நாடகாவில் கொண்டுபோய் வைத்துள்ளனர். ஒரு ஆய்வை செய்வதற்குக்கூட நாம் அடுத்த மாநிலத்தின் ஆதரவைப் பெற்றாக வேண்டிய அவலம்.
அந்த நிலைமையை தற்போதுதான் மாறியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பெரும் முயற்சியால், பெங்களூருவில் முடங்கிக் கிடந்த கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
வரும் காலங்களில் புதிய ஆராய்ச்சிகள் செய்ய, இது பெரிய வாய்ப்பை உண்டாக்கித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் முன் முயற்சியால் பூம்புகார் பற்றிய கடல் அகழாய்வு பணிகள் வேகப்படுத்தப்படுத்தப்பட்டன. இன்று அதன் பலனாக ஒரு இனிப்பான செய்தி ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது.
பூம்புகாரில் உள்ள துறைமுகம் ஏறக்குறை 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அந்த ஆராய்ச்சியின் முகமாக இயங்கியவர் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் எஸ்எம் ராமசாமி. இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நாம் இந்தப் பூம்புகார் ஆராய்ச்சி சாந்து பல்வேறு தகவல்களைக் கேட்டுப் பெற்றோம். ராமசாமி நம்மிடம் பேசுகையில் "பூம்புகார் என்பது சுமார் 2,500 ஆண்டுக்காலத்திற்கு முன்பு காவிரியின் முகத்துவாரத்தின் நிறுவப்பட்டது என்றுதான் தமிழிலக்கியங்களில் கூறப்பட்டு வந்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் முன் அழிந்ததா பூம்புகார் துறைமுகம்?:
இது போகக் கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு கடல்கோளால் அழிக்கப்பட்டது என்று மணிமேகலை காப்பியமும் கூறுகின்றது. இதற்கு மேலாக எந்தவிதமான ஆய்வுகளும் இந்தப் பூம்புகார் பகுதியில் நடத்தப்படவில்லை.
ஆனால் இந்தப் பூம்புகாரில் பல புதிர்கள் இருக்கின்றன. பூம்புகார் என்பது ஆரம்பக் காலகட்டத்தில் எந்த இடத்திலிருந்தது? இப்போது கூறப்படும் இடத்தில்தானா? அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலிருந்ததா? அவ்வாறு வேறு இடத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தால், அது எந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கும்?
அப்படி என்றால் இந்தத் துறைமுகம் எப்படி அழிந்தது? கடல்மட்டம் உயர்ந்ததாலா? அல்லது கடல்கோள் மட்டும்தானா? இல்லை நில அமைப்புகள் உயர்ந்தும் தாழ்ந்து இறங்கியதாலா? அப்படி இல்லை என்றால் சூறாவளி காரணமா? மண் அரிப்பு அல்லது மண் சரிவால் நடந்ததா? எனப் பல்வேறு புதிர்கள் இதன் பின்னணியில் இருக்கின்றன. ஆகவேதான் இந்த ஆய்வுத்திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுத் திட்டத்தின் முதற்கட்டமாக ஜெப்கோ (GEBCO) என்று சொல்லக் கூடிய தொழில்நுட்பத்தின் வழி ஆராய்ந்தோம். இந்த ஜெப்கோ என்ற தொழில்நுட்பம் கடலுக்கு அடியில் உள்ள தரைமட்டத்தை அப்படியே படமாக வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டது.
அதைப் போலவே எம்பிஎஸ் ( MBES ) என்று சொல்லக் கூடிய ஒலியைக் கடலுக்கு அடியில் அனுப்பி, மீண்டும் அந்த ஒலி அலைகளை மேலுக்குக் கொண்டுவந்து கடலின் மட்டத்தை மிகத் துல்லியமாக அளப்பது.
இதைக் கொண்டு கடலுக்கு அடியில் ஏதேனும் நகரங்கள் இருக்கின்றனவா? அல்லது கட்டுமானங்கள் இருக்கின்றனவா? ஏதேனும் தளவாடங்கள் தென்படுகின்றனவா? என்பதை அறியலாம்.

பூம்புகார் கடலுக்கு அடியில் காட்சி தந்த துறைமுக நகரம்:
இப்படியான தொழில்நுட்பத்தை வைத்து நாங்கள் ஆய்வு செய்தபோது கடலுக்கு அடியில் 250 சதுர கி.மீட்டரில் ஒரு துறைமுக நகரமே கடலுக்கு அடியில் தென்பட்டது. அதுதான் பூம்புகார். இந்தத் துறைமுகத்தை உலகுசார் துறைமுக மாறுதல்களைக் கொண்டு ஒப்பிட்டபோது குறைந்தது 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்துள்ளது" என்றவர் தொடர்ந்தார்.
"நமது இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி காலகட்டம் பற்றியே அதிகமாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் பூம்புகாரைப் பற்றி பட்டினப்பாலையில் சில குறிப்புகள் வருகின்றன.
அதில் சங்ககால நகர அமைப்புகள், சாலை வசதிகள், கட்டிட அமைப்புகள், கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள தளங்கள், மாலை நேரத்தில் நடக்கக்கூடிய சந்தைகள், பகல் நேரச் சந்தைகள், கடைவீதிகள், வெளிநாட்டினர் வசித்த பகுதிகள், நம்முடைய உழைக்கும் மக்கள் வசித்த பகுதி, கப்பல் சார்ந்த மக்கள் வசித்த பகுதி என இவை அனைத்தைப் பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டுள்ளது. பட்டினப்பாலை மிக அதிகமாக நகர அமைப்புக்களைக் குறித்தே விவரித்துள்ளது.
நாங்கள் எக்கோ சவுண்ட் என்ற தொழில்நுட்பத்தை வைத்து எடுத்த வரைப்படங்களில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. நாங்கள் இதனை வைத்து ஆயிரம் சதுர கி.மீட்டரில் ஆராய்ந்தோம். கடலில் கிடைத்த காட்சியை நாங்கள் முப்பரிமாணமாக வடிவமைத்துப் பார்த்தோம்.
அதில் பள்ளமாக வெட்டப்பட்ட கப்பல் தளங்கள், செவ்வக வடிவில் வெட்டி அமைக்கப்பட்ட கப்பல் நிறுத்தப்படும் தளங்கள், கட்டிடங்கள் இருந்த இடங்கள், சுற்றுச்சுவர் இருந்த இடங்கள், அதன் உள்ளாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள், அதற்கு மேலாக உயரமாக அமைந்திருந்த கலங்கரை விளக்கம் ஆகியவை அனைத்தும் தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்றவரிடம் பூம்புகார் கலங்கரை விளக்கமும் எகிப்திலிருந்த கிளியோபாட்ரா கலங்கரை விளக்கமும் ஒரே சாயலில் உள்ளதாக உங்களது ஆய்வில் கூறியுள்ளீர்கள். அது குறித்த விளக்கங்கள் தர முடியுமா? என்று கேட்டோம்.

கிளியோபாட்ரா கலங்கரை விளக்கத்தைவிடப் பழமையானதா?:
"பூம்புகாருக்கும் எகிப்திற்கும் கட்டாயம் வணிகத் தொடர்பு இருந்துள்ளது. இங்குள்ள சுற்றிச்சுற்றி மேலே எழும்பும் அமைப்பு கொண்ட கலங்கரை விளக்க வடிவ முறையும் அதை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தூண்களும்கூட கிளியோபாட்ரா கலங்கரை விளக்கம் போன்றே உள்ளது.
ஆனால் கிளியோபாட்ரா கலங்கரை விளக்கத்திற்கு 6 ஆயிரம் ஆண்டுகள்தான் வயது. பூம்புகார் கலங்கரை விளக்கத்திற்கு 15 ஆயிரம் ஆண்டுகள் என வயதைக் கணித்திருக்கிறோம்.
கிளியோபாட்ரா கலங்கரை விளக்கம் சிமெண்ட் மட்டும் செங்கற்களை வைத்துக் கட்டப்பட்ட நவீன வடிவம். 1500 ஆண்டுகளுக்கு முன் பராந்தகச் சோழன் கோடியக்கரையில் உருவாக்கி உள்ள கலங்கரை விளக்கமும் இதே போன்றே உள்ளது.
ஆகவே பூம்புகார் மிகப் பழமையான கலங்கரை விளக்கங்களில் ஒன்று எனத் தைரியமாகச் சொல்லலாம்" என்றவரிடம் கிடைத்துள்ள மாதிரிகளைக் கடலுக்கு வெளியே எடுத்து வந்து ஆய்வு செய்வது சாத்தியமா? என்றும் கேட்டோம்.
அதற்கு, "நாங்கள் 100 இடங்களில் கடலுக்கு அடியில் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி சோதனை செய்துள்ளோம். அதில் கிடைத்தவற்றை கார்பன் சோதனைக்கு உட்படுத்த உள்ளோம். அந்தச் சோதனை உறுதியானால் இன்னும் துல்லியமான எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது கூறமுடியும்" என்கிறார்.
உலகில் உள்ள 3 துறைமுகங்கள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அப்படி என்றால் பூம்புகார் அவற்றிற்கு எல்லாம் முந்தியதா? எனப் பல அடுக்கடுக்கான கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.
2000 ஆயிரம் ஆண்டுகள் பழமை என்பதையே தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை ஏற்கவில்லை. அதுவே பெரும் விவாதமானது. இன்று நீங்கள் 15 ஆயிரம் ஆண்டுகள் வரைக் கொண்டு போய் தமிழரின் வரலாற்றை நிறுத்தி உள்ளீர்கள். அது பற்றி உங்கள் கருத்து எனக் கேட்டோம்.

17 லட்சம் ஆண்டுகள் முன்னால் தென்னிந்தியாவில் ஆதி மனிதன்:
அதற்கு அவர், "கொத்தலையார் பகுதியில் கிடைத்துள்ள மனித எச்சங்களையும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ள எச்சங்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது சுமார் 17 லட்சம் முதல் 24 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனித இனம் இருந்துள்ளது எனக் கண்டுபிடித்துள்ளார்.
ஆபிரிக்காவில் தோன்றிய ஹோமோசேமியன்ஸ் என்ற இனம் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மெல்ல நடக்க ஆரம்பித்தது. அந்த இனம் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன்பே வந்து சேர்ந்தது.
ஆனால் 17 முதல் 24 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவில் மனித இருந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன. அப்படி என்றால் நாம் ஏன் ஆப்ரிக்காவிலிருந்த வந்த இனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்? ஏனென்றால் நமது ஆய்வுகள் மீது நமக்கே நம்பிக்கை இல்லை. அதற்கு ஒரு வெளிநாட்டுக்காரன் வந்து நிரூபித்தால்தான் நாம் நம்புவோம். அதுதான் இங்கே நிலவும் நம்பிக்கை. அதை நாம் உடைக்க வேண்டும்.
தமிழனின் உணர்ச்சி சார்ந்ததாக இருந்தாலும் தொல்பொருள் சார்ந்தாக இருந்தாலும் உடனே சிந்துசமவெளி நாகரிகத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் நடத்திய ஆய்வின் முடிவில், தற்போது உள்ள பூம்புகாரிலிருந்து 30 கி.மீ கடலுக்கு உள்ளே, கடல் ஆழத்தில் 50 மீட்டர் கீழாக ஒரு துறைமுகம் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளோம்.
70 கப்பல்களுக்கு மேல் நிறுத்தி வைக்கும் வசதிகள் உள்ள கப்பல் தளங்களையும் கண்டுபிடித்துள்ளோம். இதுதான் alexandria cleopatra harbor போலவே உள்ளது என்கிறோம். lothal harbour போலவே உள்ளது. நமது பூம்புகார் இவற்றிற்கு முந்தியது. ஆகவே நாங்கள் கணித்துள்ளோம், கலாச்சாரமும் நாகரிகமும் தமிழ்நாட்டிலுள்ள பூம்புகாரிலிருந்துதான் அங்கே சென்றுள்ளது. நாங்கள் தனியாகச் செய்த ஆய்வு இல்லை இவை. 12 விதவிதமான நிறுவனங்கள் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தி முடித்துள்ளோம்.
ஆக, தமிழில் பேசப்படும் சங்ககாலம் என்பது தமிழனின் நாகரிகத்தைக் கணிக்கக் கூடிய சரியான காலம் அல்ல. சங்ககாலத்தில்தான் ஆவணப்படுத்தக் கூடிய வசதிகள் தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். சங்ககாலமே தமிழனின் நாகரிகத்தின் தோற்றுவாய் காலம் அல்ல. சங்ககாலம் என்பது ஆவணப்படுத்தப்பட்ட காலமே ஒழிய, நிகழ்வுகள் நடந்த காலம் அல்ல. அதற்கு முன்பே நமக்கு நாகரிகம் இருந்துள்ளது.

ஆய்வு செய்யாமல் கிடக்கும் தமிழர்களின் அதிசயங்கள்:
நம்மிடம் நூற்றுக்கணக்கான தொல்லியல் தளங்கள் உள்ளன. ஆனால் நாம் இதுவரை ஒரு தொல்லியல் தளத்தைக்கூட கார்பன் சோதனை முறைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்யவில்லை. மாதிரிகளையும் சிற்பங்களையும் வைத்துத்தான் சோதித்துக் கொண்டுள்ளோம்.
கலிங்கத்துப்பரணியில் கூறப்படும் காஞ்சிபுரம் பற்றி நாம் இன்னும் அதிகம் ஆராயவில்லை. சோழர்களின் நாகரிகத்தை இன்னும் நாம் முறையாக ஆராயவில்லை. கல்வெட்டுகள் கூட அதிக அளவில் ஆராயப்படவில்லை. குலோத்துங்கன் காலத்தில் கடல் மணல் வந்து விளைநிலங்களை மூடியதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. குலோத்துங்கன் கடல் மணல் மூடிய விவசாய நிலங்களைச் சீர்செய்பவர்கள் தாங்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆணையிட்ட சான்று கிடைத்துள்ளது. ஆனால் அது ஆராயப்படவில்லை.
அதைப்போன்று தஞ்சை கோயில் கட்டுமானப் பணிகளுக்கு உயரமான மனிதர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டதற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன. 3100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெடியோன் என்ற மனிதன் 8 முதல் 9 அடி உயரத்தில் குமரிகண்டத்தில் வாழ்ந்தான் என ஒரு குறிப்பு சொல்கிறது. தஞ்சைக்கு அவன் ஏன் வந்திருக்கக் கூடாது?
ஆக, இவைபோன்ற தரவுகளை நாம் ஆய்வு செய்யும் போது நம்முடைய நாகரிகம் இன்னும் பழமையானது என்பதை அறிவியல்ரீதியாக நிரூபிக்க முடியும்" என்கிறார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications