Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 ஆயிரம் ரூபாய் புற்றுநோய் மாத்திரை வெறும் 80 ரூபாய்; ரொம்ப சீப்! Generic Medicine பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்கள் மத்தியில் இப்போது Generic Medicine பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 'அம்மா' மருந்தகம் என்று ஒன்றை உருவாக்கினார். இங்கே வழக்கமாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளின் விட 80% விலை குறைவாகக் கிடைக்கும். ஆனால், இந்த கடைகள் திமுக ஆட்சியில் மூடப்பட்டுவிட்டன. இதேபோல் பிரதமரின் மலிவு விலை மருந்தகங்கள் இப்போது பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இங்கே வழங்கப்படும் மாத்திரைகளின் விலை மிகக்குறைவு.

pm modi

இந்த மருந்தகங்களில் விலை குறைவாக இருப்பதால் தரமும் குறைவாக இருக்கும் என மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இங்கே விற்பனையாகும் மருத்துகளுக்கு Generic Medicine என்று பெயர். அதனால்தான் இவை விலை குறைவாக உள்ளன. மக்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காக உலகம் முழுக்க இந்த மாதிரியான Generic Medicine விற்பனை செய்வதற்கு எஃப்டிஏ அனுமதி வழங்கியுள்ளது. அது என்ன Generic Medicine ? ஏன் இவை விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன? இப்படியான சந்தேகங்களுக்கு டாக்டர் கதிர்வேல் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

டாக்டர் கதிர்வேல் பேசும்போது, "ஒரு நோய்க்கான மருந்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஆய்வு செய்து கண்டுபிடிக்கிறது என்றால், அதற்கான உரிமம் அந்தக் குறிப்பிட்ட நிறுவனம்தான் வைத்திருக்கும். அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அப்படி மீறி பயன்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின்படி குற்றம். இந்தக் காப்புரிமை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லும். அதன்பிறகு அந்த மருந்தின் உள்ள சேர்மானங்களை வைத்து வேறு நிறுவனங்கள் தயாரிப்பதற்காக உரிமத்தை Food and Drug Administration வழங்குகிறது. அப்படித் தயாரிக்கப்படும் மருந்துகளையே நாம் Generic Medicine என்று குறிப்பிடுகிறோம். இவை பிராண்ட் இல்லாதவை. ஆனால், பிராண்ட் மருந்தில் என்ன மாதிரியான மருத்துவக் குணங்கள் உள்ளதோ அது அப்படியே இதிலும் இருக்கும். அதிகம் எந்த மாற்றம் காண முடியாது.

ஒரு நோய்க்கான மருந்தைத் தயாரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தொகையைச் செலவிடுகிறது. அந்த ஆராய்ச்சி வெற்றி பெற்ற பிறகே அதை மருந்தாகத் தயாரித்து வெளியிடுகிறார்கள். மேலும் விளம்பரம் செய்கிறார்கள். முகவர்களுக்கு விலையில் குறிப்பிட்ட சதவீதம் கழிவு அளிக்கிறார்கள். ஆக, மருந்தின் விலையுடன் ஆராய்ச்சிக்குச் செலவு செய்த தொகையையும் விளம்பர செலவையும் அவர்கள் திரும்ப எடுக்க வேண்டி உள்ளது. எனவேதான் பிராண்ட் மருந்துகளின் விலை அதிகமாக வைக்கிறார்கள். இதை உணர்ந்துதான் அந்த மருந்தைப் பிற நிறுவனங்கள் தயாரிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அந்த ஆராய்ச்சிக்கான செலவை அந்நிறுவனம் குறிப்பிட்ட காலகட்டத்திற்குத் திரும்ப எடுத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு சூழல் வரும்போது அந்தக் காப்புரிமை உடைந்து போகிறது.

அதன்பின்னர் அதே மூலக் கூறுகளை வைத்து Generic Medicine தயாரிக்கப்படுகிறது. இதற்கு ஆராய்ச்சி செலவுகள் என எதுவுமே இல்லை. மூலக் கூறு சேர்மானம் மட்டும்தான். எனவே இதை விலை குறைவாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இந்த மருத்தின் நிறம் அதே பிராண்ட் நிறத்தில் இருக்காது. அதே பாக்கெட்டில் இருக்காது. மாற்றம் இருக்கும். பிராண்ட் நிறத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. இதையே நாம் ஜெனெரிக் மெடிசன் என்கிறோம்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் பலர் இன்னும் அப்படி ஒரு தவறான நம்பிக்கையில் இருப்பது உண்மைதான். பிராண்ட் மருத்துக்கும் Generic மருத்துக்கும் தர அடிப்படையில் எந்தவித வித்தியாசமும் இல்லை. மூலக்கூறுகள் அனைத்தும் ஒரே தரத்திலானவைதான். தலைவலிக்கு ஒரு மருந்து உள்ளது என்றால் அதை 10 ஆயிரம் கம்பெனிகள் உற்பத்தி செய்கின்றன. அவை அனைத்தும் ஒரே மாதிரி தரம்தான். மாற்றம் இல்லை. இப்போது அரசாங்கமே இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

அதே மாதிரி மக்கள் ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே Generic மருத்துகள் கிடைக்கும் என நினைக்கிறார்கள். இதுவும் தவறு. அனைத்து நோய்களுக்குமான மருந்துகளையும் வாங்க முடியும். உதாரணமாகக் கடந்த 10 ஆண்டுகள் முன்னதாக மார்பக புற்றுநோய்க்கு ஒரு குறிப்பிட்ட பிராண்ட் 10 மாத்திரைகள் அடங்கிய அட்டை 3 ஆயிரம் ரூபாய் இருந்தது. இந்த மாத்திரியை ஒரு நோயாளி 10 ஆண்டுகள் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குணமாகும். இன்றைக்கு அந்த மாத்திரையின் காப்புரிமை காலாவதியாகிவிட்டது. இப்போது Food and Drug Administration பலருக்கும் உற்பத்தி செய்ய உரிமை வழங்கிவிட்டது. இன்று அதே 10 மாத்திரைகள் Generic Medicine கடைகளில் 80 ரூபாய்க்கு வாங்கலாம். 3 ஆயிரம் எங்கே? 80 ரூபாய் எங்கே? எனவே மக்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். விலை குறைவு என்பதால் இது தரம் இல்லை என ஆகாது.

மருந்து கம்பெனிகள் நேரடியாக மருத்துவர்களிடம் தொடர்பில் இருப்பதால், அவர்கள் மருந்து சீட்டில் எழுதும்போதே குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரையே எழுதுகிறார்கள். இதனால் Generic Medicine மக்களிடம் போய்ச் சேர்வதில் தடை உள்ளது. மருந்துக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டை விட்டு மருத்துவர்கள் வெளியே வரவேண்டும். அதனால் கூட மக்கள் Generic Medicine என்பது தரம் குறைவானது என நம்புகிறார்கள். அதை மாற்ற வேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ந்த வளர்ந்த நாடுகளில் பிராண்ட் மருத்துகளின் விற்பனையைவிட Generic Medicine தான் அதிகம் விற்பனையாகின்றன. அங்கே விழிப்புணர்வு வந்துவிட்டது. இந்தியாவில் அந்த நிலை இன்னும் உருவாகவில்லை. அதற்கு பெரும்பாலான மருத்துவர்கள் ஒரு தடையாக நிற்கிறார்கள்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+