Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பான விஷயம்.. டிக் டாக் சூர்யா தேவி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.. குமுறும் 63 முதியவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிக் டாக் சூர்யா தேவி மீது 63 முதியவர் ஒருவர் சென்னை போலீஸ் கமி,னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதே டிக் டாக் செயலி, அது உச்சத்தில் இருந்தபோது, உருவானவர்தான் சூர்யா தேவி. பச்சை பச்சையாக பேசிக் கொண்டு, ஆடையை குறைத்துக் கொண்டு ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்தவர்களில் ஒருவர் டிக் டாக் சூர்யா.

இவரது நடவடிக்கைகள் காரணமாக ரவுடி பேபி என்ற செல்ல பெயரையும் பெற்றார்.

பள்ளி நிகழ்ச்சி

பள்ளி நிகழ்ச்சி

டிக் டாக் சூர்யா தேவி தனது பிரபலத்தை பயன்படுத்தி, வெளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். பள்ளி நிகழ்ச்சிக்கு கூட இவரை அழைக்கும் நிலைமை உருவானது. டிக் டாக்கில் இவரை போலவே இலக்கியா, சாதனா போன்றவர்களும், சர்ச்சைகளுக்கு இடையே, அதிக ரசிகர்களை ஈட்டி வளர்ந்து கொண்டிருந்தனர். ஆண்களில் ஜி.பி.முத்து போன்றவர்களும் இந்த லிஸ்ட்டில் உள்ளனர்.

யூ டியூப்பிற்கு சென்ற சூர்யா

யூ டியூப்பிற்கு சென்ற சூர்யா

இந்த நிலையில்தான் டிக் டாக் தடைக்கு பிறகு யூடியூப் மூலமாக இவர்கள் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். யூடியூப்பிலும் சக யூடியூப்பர்களுடன் சூர்யா தேவிக்கு மோதல் ஏற்பட்டு அது பஞ்சாயத்தில் போய் முடிந்த சம்பவங்களை பார்த்துள்ளோம்.

அடிதடி

அடிதடி

மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் சிக்கா என்ற சிக்கந்தர். இந்த யூடியூபர் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி என்பவர் தனது ஆண் நண்பருடன் வந்து சிக்கந்தரை வழிமறித்து செருப்பால் அடித்து தாக்கினார். அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே போலீசார் 4 பிரிவுகளில் டிக் டாக் சூர்யா தேவி மீது புகார்களை பதிவு செய்தனர்.

முதியவர் புகார்

முதியவர் புகார்

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதுப்பேட்டை மீர் அசக் உசேன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (63) என்பவர் நேற்று டிக் டாக் சூர்யா தேவி மீது புகார் அளித்துள்ளார்.

இழிவாக பேசுகிறார்கள்

இழிவாக பேசுகிறார்கள்

அந்த புகார் மனுவில், சமூக வலைதளங்களில் சிக்கந்தர், சூர்யா, ஜி.பி.முத்து போன்றவர்கள் பெண்களை இழிவாக கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேசியும், உளவியல் ரீதியாக மாணவர்களையும், இளைஞர்களை மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது மிகவும் தவறான விஷயம். நமது நாட்டில் இளைஞர்கள் செல்போன், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில் டிக்டாக் செயலிலிருந்து யூ-டியூப்பில் வந்து சமூக சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவர்கள் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டு மாணவர்களின் மனதை பாதிக்கின்ற வகையில் உள்ள இரட்டை அர்த்தங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். யூ-டியூப் சேனலை முடக்கி அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு பரபரப்பு புகார் மனுவை முதியவர் வழங்கியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+