செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் வெள்ளம்...போரூர் அருகே அடித்து செல்லப்பட்ட கார்.. ஆனாலும் அதிசயம்
சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக காரில் இருந்த 3 பேரையும் போலீசார் கயிறு கட்டி மீட்டனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்த காரணத்தால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கன மழையால் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு 3,328 கன அடியாக அதிகரித்து வந்ததால் ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்தது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நேற்று அதிரடியாக அதிகரிக்கப்பட்டது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான இந்த ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் இருக்கிறது. ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஏரியிலிருந்து உபரி நீா் திறப்பு வினாடிக்கு 2,429 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் வழுதலம்பேடு, சிறுகளத்தூா், திருமுடிவாக்கம், குன்றத்தூா், காவனூா் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தரப்பாக்கம் அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக காரில் இருந்த முகமது ரபிக், அவரது மனைவி மற்றும் 10 வயது குழந்தை என 3 பேரையும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மாங்காடு போலீசார் கயிறு கட்டி பத்திரமாக கரை சேர்த்தனர்.
இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு இன்று கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை, நீர் வரத்து குறைவு காரணமாக நீர்மட்டம் 22 அடிக்கும் கீழ் சென்றதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல் சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்படும் உபரிநீர் 350 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 816 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 242 கனஅடியாக சரிந்துள்ளதுது. சென்னைக்கு குடிநீர் ஆதராமாக விளங்கும் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 470 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக காரில் இருந்த 3 பேரையும் போலீசார் கயிறு கட்டி மீட்டனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்த காரணத்தால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கன மழையால் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு 3,328 கன அடியாக அதிகரித்து வந்ததால் ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்தது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நேற்று அதிரடியாக அதிகரிக்கப்பட்டது சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான இந்த ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் இருக்கிறது. ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஏரியிலிருந்து உபரி நீா் திறப்பு வினாடிக்கு 2,429 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் வழுதலம்பேடு, சிறுகளத்தூா், திருமுடிவாக்கம், குன்றத்தூா், காவனூா் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்படட்து. அதேபோல் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தரப்பாக்கம் அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக காரில் இருந்த காரில் இருந்த முகமது ரபிக், அவரது மனைவி மற்றும் 10 வயது குழந்தை என 3 பேரையும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மாங்காடு போலீசார் கயிறு கட்டி பத்திரமாக கரை சேர்த்தனர்.
இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு இன்று கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை, நீர் வரத்து குறைவு காரணமாக நீர்மட்டம் 22 அடிக்கும் கீழ் சென்றதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல் சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்படும் உபரிநீர் 350 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 816 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 242 கனஅடியாக சரிந்துள்ளதுது. சென்னைக்கு குடிநீர் ஆதராமாக விளங்கும் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 470 மில்லியன் கனஅடியாக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்

Click it and Unblock the Notifications