'மூஞ்சியை உடைச்சிடுவேன்'; பாஜக நிர்வாகிக்கு மிரட்டல்.. சென்னை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு
சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பாலசுப்ரமணியம் அளித்த கொலை மிரட்டல் புகாரில், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சாய் சத்யனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பாலசுப்ரமணியத்திற்கு 63 வயது ஆகிறது. இவர், நேற்று பாஜக சார்பில் வேளச்சேரியில் உள்ள தனியார் இடத்தில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்குள் சிறிய அளவில் சலசலப்பு ஏற்பட்டது.

பாஜக நிர்வாகிகளின் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யனுக்கும், பாலசுப்ரமணியனுக்கும் கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது . அப்போது பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் கொலை மிரட்டல் விடுத்தாக புகார் எழுந்துள்ளது.
இதுபற்றி சென்னை கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பாலசுப்ரமணியம் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில், நான் பாஜக மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளேன். ஜூன் 30ம் தேதி வேளச்சேரி விஜயநகர் பிஆர் காம்ப்ளக்ஸ் பின்புறம் உள்ள மஹாலில் பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சாத் சத்யன் பேசும் போது, மூஞ்சியை உடைத்து விடுவேன் என மிரட்டினார், என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறினார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்து எச்சரிக்கை செய்துள்ளார். எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் கவலையுடன் உள்ளார்கள் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு தர வேண்டும்.
இந்நிலையில் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பாலசுப்ரமணியம் அளித்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் 294 (b), 352, 506 (1), உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சாய் சத்யனை தேடி அவரது இல்லத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் சாய் சத்யனை வேளச்சேரி போலீசார் தேடி வருகின்றனர்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications