ஆணுறை வாங்க லட்சங்களை கொட்டிய சென்னைவாசி.. ஒரே ஆண்டில் 228 முறை ஆர்டர்.. செப்டம்பரில் ஹைலைட்
சென்னை: இந்தியர்கள் ஆன்லைனில் எப்படி பொருட்களை வாங்குகிறார்கள் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சென்னையை சேர்ந்த ஒருவர், ஆணுறை வாங்க ஆண்டுக்கு பெரிய அளவில் செய்திருப்பது தெரியவந்துள்ளது.. சென்னையை சேர்ந்த குறிப்பிட்ட நபர், ஒரே ஆண்டில் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்துள்ளார். அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 ஆகும். இதற்காக ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார்.
முன்பெல்லாம் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது என்பது நடக்காத காரியம்.. இப்போது ஒரு கடையில் போய் வேண்டிய பொருட்களை வாங்கலாம் என்று நினைப்பதே நம்பும் படியாக காரியமாக இல்லை.. ஏனெனில் இப்போது ஓரளவு நல்ல வருமானம் உள்ள பலர் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குகிறார்கள்..

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்துவாங்குவது அதிகமாகி விட்டது. பலரும் இப்போது எல்லாம் கடையில் போய் வாங்கி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. ஓரளவு உயர் வருமானம் உள்ளவர்கள் தற்போது ஸ்விக்கி, ஜொமாட்டோ, டிமார்ட், ரிலையன்ஸ், ஜப்டோ, பிக் பாஸ்கட் என ஆன்லைன் தளங்களில் வேண்டிய பொருட்களை வாங்குகிறார்கள். அவர்கள் வாங்கும் பொருட்கள் விவரங்கள் எல்லாமே ஆன்லைனில் இருப்பதால் ரெக்கார்டுகள் அப்படியே இருக்கும். அந்த விவரங்களை வைத்து தான் ஆன்லைன் தளங்கள் கவர்ச்சி அறிவிப்பு வெளியிடுவது, விளம்பரம் வெளியிடுவது என வேலைகளை செய்கின்றன.
இந்தியர்கள் ஆன்லைனில் எப்படி பொருட்களை வாங்குகிறார்கள் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பற்றி பார்ப்போம். "இந்தியர்களிடம் ஐபோன்கள் முதல் பால் வரை, தங்கம் முதல் காய்கறிகள் வரை, சிப்ஸ் முதல் கறிவேப்பிலை வரை அனைத்தையும் இணையதளம் வழியாக ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் ஆணுறை வாங்க ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார். அவர் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்துள்ளார். அதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 ஆகும்.
ஆணுறை விற்பனை ஆன்லைனில் விறுவிறுக்காக நடக்கிறது. ஒவ்வொரு 127 ஆர்டருக்கும் ஒருதடவை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விக்கி கூறியிருக்கிறது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் ஆணுறை விற்பனை 24 சதவீதம் அதிகரித்து இருந்ததாம். பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 3 ஐபோன்களை ரூ.4.3 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். இது இந்த ஆண்டில் ஒரு நேரத்தில் ஒருவரின் அதிகபட்ச தொகைக்கான ஆர்டர் என்று கூறி உள்ளது.
நொய்டாவில் ஒருவர் புளூடூத் ஸபீக்கர்கள், ரோபோ வாக்வம் கிளீனர் போன்றவற்றை ஒரே நேரத்தில் ரூ.2.69 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். மும்பையை சேர்ந்த ஒருவர், சர்க்கரை இல்லாத ரெட்புல் பானம் வாங்க ரூ.16.3 லட்சம் செலவிட்டிருக்கிறார். இதேபோல சென்னையை சேர்ந்த ஒருவர் செல்லப்பிராணிகளுக்கான பொருட்களுக்கு மட்டும் ரூ.2.41 லட்சம் செலவு செய்திருக்கிறார். பெங்களூருவாசிகள் நல்ல வாடிக்கையாளர்கள். தாராளமாக டிப்ஸ் கொடுக்கிறார்கள்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications