சென்ட்ரலில் துணிகரம்.. குழந்தையை 'அபேஸ்' செய்த ஜோடி! 4 மணி நேரத்தில் மீட்டு மாஸ் காட்டிய போலீஸ்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவை சேர்ந்த தம்பதியினர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களுடைய ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சில மணி நேரங்களில் அக்குழந்தையை காவல்துறையினர் மீட்டிருக்கின்றனர்.
ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை வேளச்சேரி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நந்தினி-நந்தேஷ்வர் தம்பதியினர் நள்ளிரவில் வந்து இறங்கியுள்ளனர். நள்ளிரவில் பறக்கும் ரயில் சேவை இல்லாததால் தம்பதியினர் தங்களது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ரயில் நிலையத்திலேயே உறங்கியுள்ளனர். சுமார் இரவு 1 மணியளவில் தூக்கத்திலிருந்து விழித்த தம்பதியினர் குழந்தை காணாமல் போனதை உணர்ந்திருக்கின்றனர். உடனடியாக ரயில் நிலையம் முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

எனவே சுமார் 2 மணியளவில் ரயில்வே காவல்துறையில் அவர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து சோதனை செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் கையில் குழந்தையுடன் ஆட்டோவில் ஏறி செல்வது தெரிய வந்திருக்கிறது. எனவே ஆட்டோ எண்ணை வைத்து, அதன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தையுடன் ஏறிய தம்பதியை செங்குன்றம் பகுதியில் இறக்கி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு செங்குன்றம் பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் குழந்தையை கடத்தியவர்கள் அதனை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது என்கிற சந்தேகமும் ஏற்பட்டது. ஏனெனில் செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு சீக்கிரமாக சென்றுவிடலாம். எனவே கடத்தல்காரர்கள் ஆந்திராவுக்கு செல்வதற்கு முன்னர் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் தீவிரமான தேடுதலில் இறங்கினர்.

அதேபோல செங்குன்றம் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் செங்குன்றம் ஏரிக்கரையில் ஒரு ஆணும், பெண்ணும் கையில் குழந்தையுடன் இருப்பதை பார்த்த காவல்துறையினர் அவர்களை விசாரிக்க தொடங்கினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தை கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை மீட்ட அவர்கள் ஒடிசா தம்பதியினரிடம் அதை ஒப்படைத்தனர். அதேபோல் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜோடி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. காவல்துறையின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications