களத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி.. ஆபரேஷனில் "அவரும்" இருக்காராமே! ஓபிஎஸ் ரைட் ஹேண்டை தூக்கும் திமுக
டெல்டாவில் திமுகவை மேலும் வலிமையாக்கும் வகையில் அவரை தட்டி தூக்க திமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்த நிலையில், அவரிடம் நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் பலர் அவரிடம் இருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஏற்பட்ட தோல்வி ஓ பன்னீர்செல்வத்தை அடித்து வீழ்த்தி இருக்கிறது. இந்த தோல்வி காரணமாக ஓ பன்னீர்செல்வம் பெரும் மன வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 நாட்களுக்கு முன் அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கினர்.

வழக்கு
அதில் அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தோல்வி மேல் தோல்வி
ஓ பன்னீர்செல்வத்திற்கு அரசியல் ரீதியாக அடுத்தடுத்து தோல்வி மேல் தோல்விதான் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை சமயத்திலேயே அவர் சின்னத்தை இழந்தார். அதை கையெழுத்து போடும் அதிகாரம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு சென்றது. அதோடு ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் அவருடைய அணியில் இருந்து வெளியேறினார். கொத்து கொத்தாக நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு எடப்பாடி அணியில் அவர் இணைந்தார். இது போக அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி என்று அண்ணாமலை சமீபத்தில் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளார். இப்படி ஓ பன்னீர்செல்வம் வரிசையாக தோல்வி அடைந்து வருகிறார்.

வெளியேற்றம்
இந்த நிலையில்தான் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் அவரை விட்டு வெளியேறும் மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரை நம்பி இருந்தால் அரசியல் எதிர்காலம் சூனியம் ஆகிவிடும் என்று அரசியல் தலைவர்கள் பலர் நினைக்கிறார்கள். இதில் சிலர் அதிமுக பக்கமே செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதில் சிலரை மட்டும் அதிமுகவிற்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி கூறி உள்ளார். பலரை ஏற்றுக்கொள்வேன்.. சிலரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி உள்ளார். ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கத்தை குறிப்பிட்டு அவர் இப்படி சொல்லி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வைத்தியலிங்கம்
வைத்தியலிங்கம் ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமாக இருப்பதாலும், அவருக்கு எதிராக கொங்கு மாஜிக்கள் சிலர் கடும் கோபத்தில் இருப்பதாலும், அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரை கொக்கிபோட்டு திமுகவிற்கு தூக்க அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் டீம் முயன்று கொண்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே அதிமுகவில் இருந்த போது செந்தில் பாலாஜி - வைத்தியலிங்கம் நட்பாக இருந்தனர். அது போக தஞ்சாவூர் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரத்தநாடு எம்எல்ஏவாக இருக்கும் வைத்தியலிங்கத்திடம் அடிக்கடி நிர்வாக ரீதியாக பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறதாம். இந்த நெருக்கத்தை வைத்து டெல்டாவில் திமுகவை மேலும் வலிமையாக்கும் வகையில் அவரை தட்டி தூக்க திமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications