கூட இருந்தவங்களும் போயிட்டாங்களே! முக்கிய "தலை" எடப்பாடி பக்கம் ஜம்ப்.. சர்ரென சரிந்த ஓபிஎஸ் கூடாரம்
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இருந்தாலும் அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமையை எப்படியாவது கைப்பற்றிவிடலாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். தற்போது இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி, பொதுக்குழு மூலம் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை மொத்தமாக ஒழிக்க திட்டமிட்டு வருகிறார்.
பொதுக்குழு தீர்மானம் மூலம் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி.. அந்த பதவியை ஏற்க தீவிரமாக எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

ஓபிஎஸ் திட்டவட்டம்
ஆனால் ஓபிஎஸ் திட்டவட்டமாக ஒற்றை தலைமைக்கு எதிராக ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் பேசிவிட்டார். ஜெ.வுக்கே உரிய நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை யாருக்கும் தரவே கூடாது.. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர வேண்டும். 14 சீனியர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு உருவாக்கப்பட வேண்டும். ஒற்றைத் தலைமை பிரச்சனை குறித்த பேட்டி அளித்ததை எடப்பாடியும் நானும் இணைந்து கண்டிக்க வேண்டும், என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.

ஆதரவு
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ்தான் ஒற்றை தலைமை.. அவருக்குத்தான் கட்சியை வழி நடத்த தகுதி இருக்கிறது என்று சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இன்று வெளியான செய்தி தாள்களில் கூட முதல் பக்கத்தில் இதற்காக விளம்பரம் கொடுக்கப்பட்டது. சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் இது தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

உண்மையான ஆதரவு
ஒரு பக்கம் இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் இன்னொரு பக்கம் களத்தில் ஓபிஎஸ்ஸுக்கான நிர்வாகிகள் ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடிக்கு ஆதரவாக வரிசையாக அடுத்தடுத்து பல்வேறு நிர்வாகிகள் ஆதரவு அளித்து வருகிறார்கள். எடப்பாடிக்கு ஆதரவாக நிர்வாகிகள் காலையில் இருந்து வரிசையாக பேட்டி அளித்து வருவது ஓபிஎஸ் தரப்பிற்கு கிலியை ஏற்படுத்தி உள்ளதாம். முன்னாள் எம்.எல்.ஏ., ஜக்கையன், ஒற்றைத் தலைமை நிச்சயம் உருவாகும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் இன்று காலை குறிப்பிட்டார்.

பலர் ஆதரவு
முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட இன்னும் பலரும் காலையில் இருந்து எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் காலையில் இருந்து எடப்பாடிதான் ஒற்றை தலைமையை கைப்பற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் பலரும் வரிசையாக பேட்டி அளித்து வருகிறார்கள். அதிமுக இளைஞரணி சார்பில் ஈபிஎஸ்-க்கு இன்றுதான் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இப்படி வரிசையாக.. நிமிடத்திற்கு நிமிடம் எடப்பாடி பக்கம் ஆட்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

பேட்டி
சமீபத்தில் எடப்பாடி பற்றி ஓபிஎஸ் பேட்டி அளித்த போது கூட வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட சிலர்தான் ஓபிஎஸ் பக்கம் இருந்தனர். அந்த செய்தியாளர் சந்திப்பிலேயே ஓபிஎஸ்ஸுக்கு பெரிய ஆதரவு இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணத்தில் இருந்தே ஓபிஎஸ் கேம்பில் இருந்த முக்கிய நிர்வாகி ஒருவர் இப்போது நேரம் பார்த்து எடப்பாடி கேம்பிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி கேம்ப்
அன்று செய்தியாளர் சந்திப்பில் அந்த முக்கிய புள்ளி ஓபிஎஸ்ஸுடன் காணப்படவில்லை. அவர் மட்டும் மிஸ்ஸிங் . எப்போதும் கூடவே இருப்பவர் அன்று இல்லை. அதன்பின் பல்வேறு களேபரங்கள் நடந்தன. அந்த முக்கிய புள்ளியும் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டார். ஓபிஎஸ்சை கூட்டங்களில் சந்தித்தாலும், இவர் ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்தும் தனக்கு அவர் பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை.
Recommended Video

சப்போர்ட் இல்லை
உட்கட்சி தேர்தலில் பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை. அவருடன் துணைக்கு இருந்து எந்த பயனும் இல்லை என்ற விரக்தியில் இப்போது நேரம் பார்த்து அந்த முக்கிய புள்ளி எடப்பாடி பக்கம் தாவி உள்ளதாக கூறப்படுகிறது. 66 எம்எல்ஏக்களில் 4-6 எம்எல்ஏக்கள் மட்டுமே ஓபிஎஸ்ஸுக்கு சப்போர்ட் செய்வதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட இருந்தவர்களே இப்படி போறாங்களே என்ற விரக்தி ஓபிஎஸ் கேம்பில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications