முடிஞ்சா தொட்டுப் பாரு.. கருணாநிதி குறித்து அவதூறு! சவால் விட்ட சீமான்.. கமிஷனர் ஆபிசுக்கு போன புகார்
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும், பாடல் பாடியதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் புகார் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முன்னதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக கட்சியின் பேச்சாளரும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது சாட்டை துரைமுருகன் பேச்சு திமுகவினரை பெரும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது.
பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய சாட்டை துரைமுருகன் திமுக தலைவர்களையும் அக்கட்சி எம்பி எம்.எல்.ஏக்களையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து மிகவும் அவதூறாக பேசினார். மேலும் சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றையும் சாட்டை துரைமுருகன் பாடி காட்டினார். இதை அடுத்து திமுக ஐடி விங் பிரிவு நிர்வாகிகள் இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சாட்டை துரைமுருகனை தேடி வந்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்த துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது சாட்டை துரைமுருகனை சிறையில் அடைக்க தேவையில்லை என கூறி நீதிபதி விடுவித்தார். முன்னதாக சாட்டை துரைமுருகனின் கைது சம்பவத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,” புள்ளபூச்சி என்பதால் கைது செய்து விட்டார்கள்.. புலியையோ சிங்கத்தையோ கைது செய்ய முடியுமா? நான் அந்த பாடலை பாடுகிறேன்.. முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.. தொட்டுப் பார்க்கட்டும்” எனக் கூறி அந்த பாடலை பாடி காட்டினார்.
இதை அடுத்து அந்த பாடல் ஆனது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான நடராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications