மீன் மாதிரி துள்ள வச்சிட்டாங்க.. காலம் மாறிப்போச்சு.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுதியவர்களுக்கு ஷாக்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்.. இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II.இல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 08:2024, நாள் 20.08.2024-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல் (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.
தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேர்வர் தங்களுடைய ஆதார் அட்டை / கடைடச்சிட்டு (PASSPORT) ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் அட்டை (PANCARD)/ வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர்.. .
தேர்வு கடினம்: இந்த தேர்வு முக்கியமான சில விஷயங்களை கற்றுக்கொடுத்து உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்.. இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.
1. இந்த முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கேள்விகள் பள்ளி பாட புத்தகங்களில் இருந்து மட்டும் கேட்கப்படவில்லை. அதற்குள் வெளியில் இருந்தும் அதிகம் கேட்கப்பட்டன.
2. யுபிஎஸ்சி தேர்வு போல பெரும்பாலான கேள்விகள் முழுக்க முழுக்க வெளியில் இருந்து கேட்கப்பட்டன.
3. முன்பெல்லாம் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளை பள்ளி பாட புத்தகங்களை முழுமையாக படித்தாலே கொஞ்சம் நல்ல மார்க் எடுக்க முடியும். ஆனால் இந்த முறை நடந்த தேர்வு மிக கடினமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
4. கணிதத்தில் இருந்து கடினமான கேள்வி, தீவிரமான பார்முலாக்களை பயன்படுத்த வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன .
5. அறிவியலில் இருந்து இதற்கு முன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் கேட்கப்படாத டைப் கேள்விகள் அதிக அளவில் கேட்கப்பட்டன.
6. அதெல்லாம் போக நிகழ்காலத்தில் இருக்கும் பொது அறிவு தொடர்பான ஆழமான கேள்விகளும் கேட்கப்பட்டன.
7. இனிமேல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 படிப்பவர்கள்.. இப்போது படிக்கும் முறையை மாற்றி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு படிப்பது போல படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக அமைந்துள்ளது. போட்டி உச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications