சென்னையே நடுங்கிப்போச்சு.. தொடர் செக்ஸ் டார்ச்சர், கருக்கலைப்பு.. நர்ஸை ஏமாற்றிய மோசடி டாக்டர் கைது
சென்னை: சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி செவிலியரை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் மற்றும் கருக்கலைப்பு செய்த புகாரில் பில்ரோத் மருத்துவமனை மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிகாலையில் எழுந்தாலே ஏதாவது ஒரு பாலியல் பிரச்னைகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டும், கடந்து சென்று கொண்டும்தான் இருக்கிறோம்.

காதல் எனும் பேரில் சில மோசடி பேர்வழிகளிலும் தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கருக்கலைப்பிலும் மருத்துவரே ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வருகிறது பில்ரோத் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கெளதம் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். அங்குள்ள செவிலியரிடம் கெளதம் பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த செவிலியரின் கருவையும் பலமுறை கலைத்துள்ளார். நீண்டநாள்களாக பாலியல் பலாத்காரம் செய்தும், கருவை கலைத்தும் வந்த நிலையில், தன்னை திருமணம் செய்யாமல் மருத்துவர் கெளதம் ஏமாற்றுவதாக அந்த செவிலியர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின்பேரில் திருமண மோசடி மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கெளதமை தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தப் பெண்ணை வேற்று சமுதயாத்தைச் சேர்ந்த பெண் என்பதனால் திருமணம் செய்யாமல் கெளதம் ஏமாற்றி வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கான சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தனது தாயிடம் அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி வற்புறுத்தி அவரை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்பெண் கருவுற்ற நிலையில் பலமுறை கருக்கலைப்பு செய்ய கூறியதாகவும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கெளதம் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications