இதென்ன கண்ணாடி மாதிரி! விவசாயியை ஒரே நாளில் லட்சாதிபதியாக்கிய "அதிர்ஷ்டம்".. கடவுள் இருக்கான் குமாரு
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் இருக்கும் விவசாயி ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம் காரணமாக ஒரே நாளில் அவர் லட்சாதிபதியாகி இருக்கிறார்.
வாழ்க்கையில் சிலருக்கு மட்டும் எதிர்பார்க்காத நேரத்தில் எல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும். ஒரு நாள் பரம ஏழையாக இருக்கும் நபர்.. மறுநாளே லட்சாதிபதியான சம்பவங்கள் கூட உலகில் நடந்து இருக்கின்றன.
சுரங்கம் தோண்ட போய் தங்கம் கிடைத்து லட்சாதிபதியான பலர் இருக்கிறார்கள். அதே சமயம் கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் ஒரே நாளில் ஏழையான சம்பவங்களும் நடந்து இருக்கின்றன.

லட்சாதிபதி
அப்படித்தான் மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஏழை விவசாயி ஒருவர் ஒரே நாளில் லட்சாதிபதியாகி இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் பட்டி என்ற பகுதியில் பிரதாப் சிங் யாதவ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்த நிலையில் பன்னா என்று பகுதியில் சின்ன விவசாய நிலத்தை 200 ரூபாய்க்கு லீசுக்கு எடுத்து அங்கு சுரங்கம் தோண்டி வருகிறார். விவசாய தேவைக்காக நிலம் வாங்கியவர் அங்கு சுரங்கம் தோண்டி இருக்கிறார்.

சுரங்கம்
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் சுரங்கம் தோண்டிக்கொண்டு இருந்த போது கண்ணாடி போன்ற கல் ஒன்று அவருக்கு தட்டுப்பட்டுள்ளது. இதை பார்த்தது வியப்பு அடைந்தவர் என்ன இது என்று குழம்பி போய் இருக்கிறார். எங்கே இது வைரமாக இருக்குமோ என்று வியப்படைந்து உடனே தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். வீட்டில் உள்ளவர்களிடம் காட்டிய நிலையில்.. அவர்களும் இது வைரம் போல இருப்பதாக கூறியுள்ளனர்.

எவ்வளவு கேரட்
இதனால் குஷி அடைந்தவர்.. தப்பாக அதை பிளாக்கில் விற்காமல் உடனே மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். மாவட்ட அதிகாரிகள் விஷயம் அறிந்து அந்த கண்ணாடி போன்ற கல்லை சோதனை செய்துள்ளனர். சோதனையில் அது வைரம் என்று உறுதி செய்யப்பட்டது, அதுவும் 11.88 கேரட் கொண்ட வைரம். இது நல்ல குவாலிட்டியாகவும் இருந்துள்ளது.

ஏலம்
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த வைரத்தை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது. இந்த ஏலத்தில் வரும் காசில், மாவட்ட நிர்வாகத்திற்கான ஏல தொகை போக மீதம் உள்ள பணம் இந்த விவசாயிக்கு கொடுக்கப்படும். கிட்டத்தட்ட வைரம் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்படும் என்கிறார்கள். இதை வைத்து நான் வீடு கட்டுவேன், என் குழந்தைகளை படிக்க வைப்பேன் என்று அந்த விவசாயி கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications