சென்னையில் குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து மோசடி.. ரூ 2 கோடிக்கு மோசடி செய்தது அம்பலம்
சென்னை: சென்னையில் குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து ஒரு கும்பல் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
சென்னையில் கொரோனா பாதிப்பால் இங்கு தங்கி பணியாற்றிக் கொண்டிருந்த மற்ற மாவட்டத்தினர், மற்ற மாநிலத்தினர் சொந்த ஊர்களுக்கே சென்றுவிட்டனர். இந்த ஆண்டு வரை நிலைமை சீராகாது என கூறப்படுவதால் பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதனால் சென்னையில் ஏராளமான வீடுகளில் டூலெட் போர்டுகள் தொங்கவிட வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஓரளவு நிலைமை சீரானதை அடுத்து இங்கு திரும்பியவர்கள் ஊதிய குறைப்பு காரணமாக புறநகர் பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார்கள்.

வீடு குத்தகை
இதை ஒரு மோசடி கும்பல் நன்றாக பயன்படுத்திக் கொண்டது. வீடு குத்தகை தொடர்பாக மோசடி நடந்துள்ளது குறித்து வீடியோ கால் மூலம் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வந்த சன்ஷைன் பிராபர்ட்டீஸ் என்ற நிறுவனத்தில் விசாரணை நடத்தினர்.

விளம்பரம்
அப்போதுதான் அந்த நிறுவனம் ஓஎல்எக்ஸ், நோ புரோக்கர் போன்ற தளங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. காலியாக உள்ள வீடுகளை வாடகைக்கு பிடிக்கும் இந்த நிறுவனத்தினர் தாங்களே உரிமையாளர் போல் குறிப்பிட்ட தளங்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

தப்பி ஓடுதல்
அதை பார்த்து தொடர்பு கொள்பவர்களிடம் வீட்டை பொறுத்து 4 லட்சம் ரூபாய் முதல் 12 லட்ச ரூபாய் வரை குத்தகை பணத்தை வசூலித்து கொண்டு தப்பி ஓடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த தகவல்கள் போலீஸாருக்கு தெரியவந்தது.

நிறுவன உரிமையாளர்
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் பிரகாஷ், காயத்ரி, விக்னேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த 3 பேரும் சேர்ந்து இதுவரை 2 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது தெரியவந்தது. இந்த பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்ததும் தெரியவந்தது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications