சென்னை ஐஐடியில் பாலஸ்தீன ஆதரவு.. தங்கம் வென்ற மாணவர் பேச்சால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த தனஜெய்?
சென்னை: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை உலகமே கண்டித்து வரும் நிலையில், சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக குரலெழுப்பியுள்ளார். சிறப்புரையாற்றும்போது இது தொடர்பான அம்மாணவர் பேசியது வீடியோவாக சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை ஐஐடியின் 61வது பட்டமளிப்பு விழா ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2012 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் உயிர்வேதிநுட்ப அறிவியலாளர் பிரயன் கே.கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

இன்றைய பட்டமளிப்பு விழாவில் 2,236 மாணவர்களுக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட என மொத்தம் 3,016 பட்டங்கள் வழங்கப்பட்டன. 444 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில்தான் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் தனஜெய் பாலகிருஷ்ணன், இஸ்ரேல் குறித்து பேசியிருக்கிறார்.
"பாலஸ்தீனத்தில் இன படுகொலை நடைபெறுகிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போரை நடத்தக் கூடிய நாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றன.
இது செயல்பாட்டுக்கான நேரம். பாலஸ்தீனத்தில் திரளான இனப் படுகொலை நடக்கிறது. மக்கள் அதிக எண்ணிக்கையில் இறக்கிறார்கள். இதற்கு வெளிப்படையான முடிவு எதுவுமில்லை. இதுகுறித்து நாமெல்லாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?
பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் மட்ட அளவில் வேலை பெற பொறியியல் மாணவர்களாகிய நாம், கடினமாக உழைக்கிறோம். நல்ல சம்பளம் பெறவும் பிற லாபங்களுக்காகவும் இதைச் செய்கிறோம். இத்தகைய பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலஸ்தீன போரில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. பாலஸ்தீனர்களைக் கொல்ல தொழில்நுட்பங்களைக் கொடுக்கின்றன.
இதைத் தடுக்கும் வழி எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். பொறியியல் பட்டதாரிகளான நமக்கு, நாம் செய்யும் பணிகளின் விளைவுகள் தெரியும். ஸ்டெம் (STEM) பின்புலத்தில் இருந்து பெரு நிறுவனங்கள் செல்லும் நாம், சாதி, வர்க்கம், நம்பிக்கை, பாலினம் ஆகியவற்றால் நசுக்கப்படும் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை ஆராய வேண்டும். இது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
பின்னணி: கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
போர் தொடங்கி 269 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். "ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு" என்று கூறியுள்ளார்.
போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications