திங்கள் கிழமைக்காக காத்து இருக்கிறேன்.. எஸ்.பி.பி பற்றி நல்ல செய்தி வரும்.. எஸ்.பி சரண் குட் நியூஸ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குறித்து திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் என்று அவரின் மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குறித்து திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் என்று அவரின் மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடகர் எஸ்.பி.பி கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.
இவரின் உடல்நிலை தற்போது இயல்புநிலையில் இருக்கிறது. பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தற்போது சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எப்படி இருக்கிறார்
தற்போது இவருக்கு நினைவு திரும்பி உள்ளது. இடையில் இவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனால் தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்துள்ளார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் நன்றாக தற்போது மூச்சு விடுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் இவரின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது.

மகன் என்ன சொன்னார்
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவரின் மகன் எஸ்.பி சரண் பேட்டி அளித்துள்ளார். அதில், அப்பா உடல் நிலை முன்னேற்றம் அடைந்து 4 நாட்கள் ஆகிறது. அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். இந்த வாரம் இறுதிக்குள் அவரின் உடல்நிலை முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் வேண்டுதல்
அவருக்காக உலகம் முழுக்க மக்கள் வேண்டி வருகிறார்கள். உலகம் முழுக்க பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கடவுள் அனுக்கிரகம் அவருக்கு எப்போதும் இருக்கும். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உங்களின் பிரார்த்தனை காரணமாக கண்டிப்பாக என் அப்பா உடல்நிலை மொத்தமாக சரியாகும் .

திங்கள் கிழமை
வரும் திங்கள் கிழமை நல்ல செய்தி வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நல்ல செய்திக்காக காத்து இருக்கிறேன், என்று எஸ். பி சரண் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த செய்தி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.பி.பி விரைவில் மீண்டு வருவார். ஆரோக்கியமாக அவர் மீண்டும் சினிமாவில் பாடுவார் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications