'முதல்வர் வேட்பாளர்".. அருவெறுப்பூட்டும் உடல் மொழி.. தோரணை.. இவரு தமிழ்நாட்டுக்கு 'சரிப்படமாட்டார்'!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு எத்தனை அரசியல் தலைவர்களைப் பார்த்திருக்கிறது.. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த காலங்களில் லட்சக்கணக்கில் சென்னையில் திரண்ட பொதுமக்கள் எப்படி 'தலைவர்களாக' அவர்களை போற்றினார்கள் என்பதற்கு சாட்சி.

எளிய தமிழில் உரையாடி எளியவராகவே வாழ்ந்து மறைந்த காமராஜர்.. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அழகு தமிழில் அடுக்கு மொழியில் அனல் பறக்க பேசிய அண்ணா, தமிழ்நாட்டின் சரித்திரத்தின் எந்த சாதனையை புரட்டினாலும் இடம்பெறக் கூடிய கருணாநிதி, ஆளுமை மிக்க எம்ஜிஆர், ஜெயலலிதா என அரசியல் ஜாம்பவான்கள் கோலோச்சிய தமிழ்நாடு இது..

A Gossip on Tamil Nadu Senior Political Leader

இங்கே கெக்கே பிக்கே அரசியல் பேசுகிற நபர்களும் ஆதாரங்களே இல்லாமல் அடித்துவிடுகிற பேர்வழிகளும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன்னர். தத்துவம், தர்க்க அரசியல் பேசிய மண்ணில் அதன் பெயராலேயே கோமாளிக் கூத்து கட்டுகிற ஏமான்களும் வந்து போயிருக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் இப்படி ஒரு சோ கால்ட் வருங்கால தலைவரை பார்க்கவே முடியாது.. அப்படியான ஒரு வினோத ஆளுமையாகாத்தான் இருக்கிறர்.. தமிழர் என்ற அடையாளத்தை முதுகில் சுமப்பவர்.. ஆனால் தமிழ்நாட்டு மண்ணில் கால் வைத்தாலே போதும்.. அவருக்குள் 'மனுவாத' மனோநிலை உச்சந் தலையில் ஏறிவிடுகிறது. செய்தியாளர்களிடம் பேசும் போதும் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பேசும் போதும் 'உச்ச'நிலையில் ஒய்யாரமாக இருக்கிற 'அடக்குமுறை' தோரணையில் தேள் கொட்டுவது போல ஒவ்வொரு வார்த்தைகளையும் விஷமமாக வெளிப்படுத்தி வருகிறார். அண்மைக்காலமாக இந்த தோரணையும் அருவறுப்பூட்டும் உடல்மொழியும் இப்போது கடுமையான விமர்சனங்களாகவே வெளிப்படத் தொடங்கிவிட்டன.

இத்தனைக்கும் ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போது, லோக்சபா தேர்தலின் போதும் இவரது பெயர் மறக்காமல் ஊடகங்களால் எழுதப்படுகிறது. மக்களை சந்தித்து தேர்தலில் ஜெயிக்காத இந்த மாமேதைதான் தமிழ்நாட்டு கட்சி ஒன்றின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்கிற பேச்சும் காலந்தோறும் இருந்தும் வருகிறது. அதுசரி இப்பவே இப்படின்னா? இவரெல்லாம் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தால், "உச்சந்தலை ஓட்டுக்குள்ள நச்சரவம் புகுந்தது" என பாடித்தான் ஆக வேண்டும் என்கிற எரிச்சல் மொழிகள் சமூக வலைதளங்களில் சரமாரியாக குவிந்து கொண்டே இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+