மேல் மட்டத்தில் என்ன நடக்குது? அண்ணாமலை வரும் முன்பே மீட்டிங்! பாஜகவில் வந்து விழுந்த ஹாட் கேள்வி
சென்னை: தமிழக பாஜகவின் கோர் கமிட்டி கூட்டம் கடந்த வாரம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை, லண்டனில் இருந்து 28-ந்தேதி திரும்பவிருக்கும் சூழலில், அவருக்காக காத்திருக்காமல் இந்த கோர் கமிட்டிக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
மூன்று மாத மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படிப்பு நவம்பர் 23-ந்தேதி முடிவடைகிறது. இவருக்கான சான்றிதழ் அடுத்த வருடம் பிப்ரவரியில் வழங்கப்படும். நவம்பர் 23-ந்தேதியோடு படிப்பு முடிந்தாலும் 1 வாரம் லண்டனில் இருந்து விட்டு நவம்பர் கடைசியில் தான் சென்னை திரும்புகிறாராம்.

காரணம், தனது குடும்பத்தினரை லண்டனுக்கு அழைத்திருக்கிறார் அண்ணாமலை. அவர்கள் லண்டன் செல்லும் நிலையில், குடும்பத்தினருடன் ஒரு வாரம் லண்டனை சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளாரம் அண்ணாமலை. அதனால், நவம்பர் இறுதியில் அவர் சென்னை திரும்புவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
சென்னை திரும்பியதும் கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறாராம். குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில், கட்சி பணிகளில் சரிவர செயல்படாத நிர்வாகிகளுக்கு மீண்டும் எந்த ஒரு பதவியும் வழங்காமல் கட்டம் கட்டப்போகிறாராம். மாவட்ட தலைவர்களில் 70 சதவீதம் தனது ஆதரவாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார் என்றும், இதற்கு கட்சியின் தேசிய தலைமையிடம் அனுமதி பெற்றுவிட்டார் என்றும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, அவரது வருகை குறித்து அண்ணாமலையிடம் சில முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் பேசியிருக்கிறார்கள். அப்போது, ’நீங்கள் சென்னை திரும்பியதும் மாநில நிர்வாகிகளில் மாற்றம் இருக்கும் ; தலைவர் பதவியும் மாற்றப்பட விருக்கிறது என இங்கு ஒரே பேச்சாக இருக்கு’’ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு, சிரிப்பை பதிலாகத்தந்த அண்ணாமலை, ’’என்னை மாத்தறதுக்கு டெல்லி வரை போய் சிலர் முயற்சித்த விவகாரம் எனக்குத்தெரியும். அதெல்லாம் பழைய கதை. கட்சித் தலைமை எனக்கு சில அசைன்மெண்ட்டுகளை கொடுத்திருக்கிறது, என்று கூறி உள்ளாராம்.
மீட்டிங்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக பாஜகவின் கோர் கமிட்டி கூட்டம் கடந்த வாரம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை, லண்டனில் இருந்து 28-ந்தேதி திரும்பவிருக்கும் சூழலில், அவருக்காக காத்திருக்காமல் இந்த கோர் கமிட்டிக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் திமுக, அதிமுக கட்சிகள் மற்றும் புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் ஆகியோர் சுறுசுறுப்பாக விறுவிறுப்புக் காட்டி வரும் நிலையில், தமிழக பாஜகவும் தேர்தலை மையப்படுத்தி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
உறுப்பினர் சேர்க்கையில் தேசிய தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தி, அதாவது, இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை நிறைவேற்ற முடியாத பாஜகவினர் மீது தேசிய தலைமைக்கு ஏற்பட்டுள்ள கோபம், வட்டார தலைவர் உட்பட மாவட்ட தலைவர்கள் நியமனம் வரை உள்ள தேர்வு செய்யப்படுபவர்களின் நிலவரங்கள், கூட்டணி விவகாரங்கள் என பல்வேறு விசயங்கள் இந்த கோர் கமிட்டியில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, அதிமுகவையும் த.வெ.க.வையும் (விஜய் கட்சி) விமர்சிக்கக் கூடாது ; அக்கட்சி களுக்கு எதிராக காண்ட்ராவெர்சியை உருவாக்கக்கூடாது.
திமுகவையும் அதன் கூட்டணிகளும் தான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். அந்த கட்சிகளை மட்டும் தான் விமர்சிக்க வேண்டும் என்று தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர், பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என எடப்பாடி பழனிச்சாமியும், எங்களின் கொள்கை எதிரி பாஜக என நடிகர் விஜய்யும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் போது, எந்த நம்பிக்கையில் அவர்களுடன் கூட்டணி உறவு ஏற்படலாம் என்கிற திட்டத்தில் அவர்களை விமர்சிக்கத் தேவையில்லை என்று சொல்கிறீர்கள்? என கேட்டிருக்கிறார்கள்.
சுதாகர் ரெட்டி பதில் சொல்லாமல், மேலிடத்தின் அறிவுறுத்தல் ; அதனை உங்களிடம் தெரிவித்திருக்கிறேன் என்று மட்டும் சொல்லியிருக்கிறார். அப்படியானால், மேல் மட்டத்தில் என்ன நடக்கிறது? என்று பாஜக தரப்பில் சீக்ரெட்டாக கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஹாட் கேள்வி இதுதான் என்கிறாகள்.












Click it and Unblock the Notifications