சென்னையில் போலியான இறப்பு சான்றிதழ்.. வாரிசு சான்றிதழ்.. பெற்ற தாய்க்கே அல்வா கொடுத்த மகன்
சென்னை: சென்னை கொளத்தூர் மக்காரம் தோட்டம் பகுதியை சேர்ந்த சுசீலா என்பவருக்கு செவ்வாப்பேட்டை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தில் 2,100 சதுர அடி நிலம் இருக்கிறது. இந்த நிலையத்தை சுசீலாவின் மகன் அல்போன்ஸ் ராஜ் தன் பெயருக்கு மாற்ற விரும்பினார். இதற்காக தாய் இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று ரூ.34 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர், மக்காரம் தோட்டம் பகுதியை சேர்ந்த 71 வயதாகும் சுசீலா என்பவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். சுசீலாவுக்கு சொந்தமான 2,100 சதுர அடி நிலம் செவ்வாப்பேட்டை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தில் இருக்கிறது.

சுசீலாவின் மகன் அல்போன்ஸ் ராஜ்க்கு 41 வயது ஆகிறது. வீட்டில் இருந்த நிலத்தின் அசல் ஆவணங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தாய் உயிருடன் இருந்தபோதே அவர் இறந்துவிட்டதாக போலியாக இறப்பு சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் உடன்பிறந்தவர்களை மறைத்து, தான் ஒரே வாரிசு என கூறி போலி வாரிசு சான்றிதழ் பெற்று புருஷோத்தமன் என்பவருக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்துவிட்டாராம்.
பின்னர் அவர் மூலம் அந்த நிலத்தை 2021-ம் ஆண்டு யாருக்கும் தெரிவிக்காமல் முருகேசன் என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு சுசீலா, தனது நிலத்திற்கான வில்லங்க சான்றிதழ் எடுத்துப் பார்த்தபோது நிலம் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து சுசீலா ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப்பதிவு செய்து தாய் இறந்ததாக போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்ற அல்போன்ஸ் ராஜை கைது செய்தார். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.34 லட்சம் என சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து நாகராஜன், கால்நடைத்துறையில் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும், அவர்களிடம் பேசி வேலை வாங்கி தருவதாக ரவிக்குமாரிடம் கூறி பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்து 49 ஆயிரத்தை பெற்றிருக்கிறார். பின்னர் போலியான பணி ஆணை நகலை ரவிக்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அதை எடுத்துக்கொண்டு மாதவரம் கால்நடை துறை அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை ரவிக்குமார் உணர்ந்துள்ளார். இது குறித்து அவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்போரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாகராஜன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications