இதுவரை என்ன வேலை நடந்துள்ளது? 1ஆம் தேதி திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்! கேள்விகளோடு ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 1ஆம் தேதி அன்று திமுக தொகுதி பார்வையாளர்கள்/ மாவட்டச் செயலாலர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகளை பார்வையிட கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி தொகுதி பார்வையாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

தொகுதிப் பார்வையாளர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி அவர்களுக்கு உதவியாக கிளை/பூத் வாரியாக தொடர்பு கொண்டு பேசி தலைமையின் அறிவுறுத்தலை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைமுருகன் கேட்டுக்கொண்டிருந்தார்.
கும்மிடிப்பூண்டி முதல் குமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தொகுதி வரை அனைத்து தொகுதிகளுக்கும் தனி தனி பார்வையாளர்கள் பணியமர்த்திய திமுக தலைமை, பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் பணிகளை நேரடியாக ஆய்வு செய்து வாரம் ஒரு முறை அது குறித்த விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தொகுதி பார்வையாளர்கள் ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என அசைன்மெண்ட் கொடுத்திருந்தது.
இதனை பலர் முறையாக கடைபிடித்து வரும் நிலையில், சிலர் கடைபிடிப்பது போல் தெரியவில்லை. இந்தச் சூழலில் தான் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் துரைமுருகன். 1ஆம் தேதி நடக்கும் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தின் போது, முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே துரைமுருகன் விடுத்த அறிவிப்பு வருமாறு;
''மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட "தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்" 01-10-2023 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.''
''இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.''
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications