ஒன்னுமே புரியல.. நிலவழிகாட்டி மதிப்பில் மாற்றம்? பதிவுத்துறை அமைச்சரிடம் கடிதத்துடன் கிளம்பிய பெயிரா
சென்னை: தமிழகம் முழுவதுமுள்ள வழிகாட்டி மதிப்பு குறித்து முக்கிய வேண்டுகோள் ஒன்றினை பதிவுத்துறை அமைச்சருக்கு, பெயிரா தலைவர் ஹென்றி விடுத்துள்ளார். அது என்ன?
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சசர் மூர்த்திக்கு, மிகக்பெரிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. வழிகாட்டி மதிப்பு சம்பந்தமாக, பொதுமக்கள் நலன் கருதி எழுதியிருக்கும் அந்த கடிதத்தில் உள்ளதாவது:
ஆக்கப்பூர்வமான செயல்பாடு: தமிழகத்தில் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையின் கீழ், திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தங்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம், பதிவுத்துறையில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகளை களைந்து, சீர்தூக்கி, செம்மைப்படுத்தி, பல்வேறு முன்னோடி திட்டங்களைக் கொண்டு வந்து மிகச் சிறப்பான முறையில் பொது மக்களுக்கு சேவையினை வழங்கி வருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

அதேசமயம் வழிகாட்டி மதிப்பினை பன்மடங்கு உயர்த்தியும், முத்திரைத்தாள் கட்டணங்களை உயர்த்தியும், பொது அதிகார ஆவணம், ஒப்பந்த ஆவணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்கு கணிசமாக கட்டணங்களை உயர்த்தியும் நடைமுறைப்படுத்தியுள்ளது சற்று வேதனைக்குரியது.
பழைய கட்டிடங்கள்: தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள புதிய கட்டிடங்கள் மற்றும் பழைய கட்டடங்கள் என அனைத்திற்கும் கூட்டு மதிப்பின் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்தரவு, பொது மக்களுக்கு மேலும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முழுவதும் நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பினை தெருக்களின் அடிப்படையிலும், புல எண்களின் அடிப்படையிலும் உயர்த்தாமல், வகைப்பாட்டின் அடிப்படையில் உயர்த்தி அது சம்பந்தமான தகவல்களை பதிவு துறையின் www.tnreginet.net என்ற இணையதளத்தில் பொதுமக்களின் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
என்ன மதிப்பு: இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்து நகர்ப்புறங்களில் வசிக்கும் பலதரப்பு மக்களும் தங்களின் அதிருப்தியை தெரிவிப்பதோடு எங்கள் வீடு அமைந்துள்ள தெருவுக்கு என்ன மதிப்பு என்றோ, அல்லது எங்கள் நிலத்தின் சர்வே எண்ணுக்கு என்ன மதிப்பு என்றோ பதிவுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள வரைவில் தெரிவிக்கவில்லை.
மாறாக குடியிருப்பு பகுதி வகைப்பாட்டின் அடிப்படையிலும், நிலம் சம்பந்தமான வகைபாட்டின் அடிப்படையிலும் வழிகாட்டி மதிப்பினை பதிவுத்துறை உயர்த்தி உள்ளது எங்களுக்கே ஒன்றும் புரியவில்லை என தங்களின் கருத்துக்களையும், அதிருத்தியையும், ஆட்சேபனையையும் தெரிவித்து வருகின்றனர்.
விழிப்புணர்வு: ஆனால், கடை கோடியில் கிராமப்புறங்களில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு இது குறித்த தகவல்களும் போதிய விழிப்புணர்வும் துளியும் இல்லை.
ஆகவே, கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களும் தங்களின் நிலங்கள் குறித்த வழிகாட்டி மதிப்பினை தெரு வாரியாக மதிப்பு மற்றும் சர்வே எண்கள் வாரியாக மதிப்பு என பதிவுத்துறை நிர்ணயித்து, எளிய மக்களும் அறியும் வண்ணம் அந்தந்த சார்-பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நிலங்கள் குறித்த தகவல்களை, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்திட வேண்டும் என்று பலதரப்பு பொதுமக்களும் வைக்கின்றனர்.
தாலுகா அலுவலகம்: அதுபோலவே தாலுகா அலுவலகம், பதிவு அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், நிலங்களின் வழிகாட்டி மதிப்பு சம்பந்தமான தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அப்பொழுது தான் தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களின் வழிகாட்டி மதிப்பினை அனைத்து தரப்பு மக்களும் அறிய முடியும்
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், மேற்கண்ட பொதுமக்களின் விருப்பத்தையும், வேண்டுகோளையும், கருத்துக்களையும் தாங்கள் ஏற்று கனிவுடன் பரிசீலித்து, மேற்கண்ட அரசு அலுவலக விளம்பரப் பலகையில் வெளியிட்டு 30 நாட்கள் கால அவகாசம் தந்து பொதுமக்களின் கருத்துக்களையும்,ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் பெற்று அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, புதிய வழிகாட்டி மதிப்பினை நடைமுறைப்படுத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுத்து டாக்டர் ஹென்றி அந்த கடிதம் எழுதியுள்ளார்.
எதிர்பார்ப்பு: பொதுமக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு, பெயிரா விடுத்திருக்கும் இந்த வேண்டுகோளானது பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. அத்துடன் தமிழக அரசு இதுகுறித்த நடவடிக்கையை உடனடியாக எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்துவருகிறது...!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications