ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்க தமிழகத்தில் விரைவில் வரப்போகும் புதிய திட்டம்.. செக் வைக்க போகும் மத்திய அரசு
சென்னை: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்க சோதனை ஓட்டமாக அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள், புதுச்சேரி, டாமன், டையு, தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பகுதிகளில் 'மேரா பில் மேரா அதிகார்' என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டம் விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. பல அடுக்கு நேரடி வரிவிதிப்பை தவிர்த்துவிட்டு ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லா தொழில்களும் ஒரு இன்வாய்ஸை வழங்குவதே இந்த வரிவிதிப்பின் நோக்கம் ஆகும். இந்த ஆறு ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் இந்த புதிய வரி விதிப்பின் மூலம் ரூ.1.5 லட்சம் கோடி வரி வருவாய் உறுதியாக கிடைக்கிறது.

வரி ஏய்ப்புகளை தடுக்கும்பட்சத்தில் ஜிஎஸ்டி வருவாய் இன்னும் கூடுதலாக கிடைக்கும் என்பதால் உள்ளீட்டு வரி கிரெடிட் (ஐடிசி)பெறுவதற்காக போலி ஆவணங்களை தாக்கல் செய்யும் நிறுவனங்களை கண்டறியும் பணியில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் அதிகாரிகள் களமிறங்கி வருகின்றனர். இதனால், ஜிஎஸ்டி அமலாக்கத்தின்போது ரூ.3 லட்சம் கோடியாக இருந்த வரி ஏய்ப்பு 2022-23-ல் ரூ.1 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
எனினும் வணிகர்கள் நூதன முறையில் வரிஏய்ப்பு செய்வது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. போலி பில்களை கொடுத்து ஏமாற்றுவதாகவும், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ய சில நுணுக்கமான வேலைகளை சில வணிகர்கள் செய்வதாகவும் புகார்கள் உள்ளது. குறிப்பாக இன்வாய்ஸில் செல்லத்தக்க GSTIN, அதன் பிரேக்அப்பில் GST, Central GST மற்றும் State GST தராமல் ஏமாற்றுவதாக புகார்கள் உள்ளது. இதை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை உணர்ந்த மத்திய அரசு அவர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்தது. இதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் 'மேரா பில் மேரா அதிகார்' திட்டம். அதாவது என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டம் செப்டம்பர் 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது.
இதற்காக பிளேஸ்டோர், ஆப்ஸ் ஸ்டோரில் பிரத்யேக mera bill mera adhikar ஆப் பயன்பாட்டில் உள்ளது. mera bill mera adhikar app இல் நுகர்வோர், தங்கள் பெயர், மொபைல் எண்ணை அளித்து எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். பொருட்கள் வாங்கும் போது ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்ததற்கான பில்லை போட்டோ எடுத்து இந்த ஆப் ல் அப்லோட் செய்யதாக வேண்டம்.. ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 பில்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.
ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் முறை உள்ளது. சோதனை ஓட்டமாக அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள், புதுச்சேரி, டாமன், டையு, தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பகுதிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது,. திட்டம் துவங்கிய 51 நாட்களிலேயே இந்த செயலி மூலம் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 972 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்.
இம்மாதம் இதுவரை குஜராத்தில் 93,576, அசாம் - 15,850, ஹரியானா - 35,429, புதுச்சேரி - 8,677, டாமன், டையூ, தாத்ரா நகர் - 1,351 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 883 ஜிஎஸ்டி, பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த ஆப் காரணமாக வணிகர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா, வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். அதன் அடிப்படையில் வரி ஏய்ப்பு தடுப்பு, ஏய்ப்பு வரியை வசூலிப்பது போன்ற துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்..
இந்த 'மேரா பில் மேரா அதிகார்' திட்டம் சோதனை ஓட்டமாக அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள், புதுச்சேரி, டாமன், டையு, தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் தமிழத்தில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக 'மேரா பில் மேரா அதிகார்' திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications