மறக்குமா நெஞ்சம்? குவிந்த 4000 மெயில்கள்! 400 பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்
சென்னை: சென்னையில் நடந்த ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரியை டிக்கெட் இருந்தும் சில குளறுபடிகளால் பார்க்க முடியாமல் வீடு திரும்பிய 400 பேருக்கு பணத்தை திருப்பி செலுத்தினார் இசைப்புயல்.
சென்னை பனையூரில் உள்ள ஆதித்யராம் மைதானத்தில் கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று ஏ.ஆர். ரகுமான் இசைக் கச்சேரி நடத்துவதாக சொல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ACTC Events என்ற நிறுவனம் செய்தது.

இந்த நிலையில் அன்றைய தினம் சென்னையில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதே டிக்கெட்டை வைத்துக் கொண்டு வேறு ஒரு நாளில் இசைக் கச்சேரி நடத்தப்படும் என ரகுமான் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் இந்த இசைக் கச்சேரியானது கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் ஆசை ஆசையாய் குடும்பத்தினருடன் சென்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அதாவது டிக்கெட் வைத்திருந்தும் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை, அந்தஅளவுக்கு கூட்டம் இருந்தது.
சில்வர், கோல்டு, பிளாட்டினம், டயமன்ட் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைனில் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை அந்த நிறுவனம் விற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த மைதானத்தில் லட்சக்கணக்கானோர் இருந்தனர். மூச்சு விட கூட முடியாத அளவுக்கு நெரிசல், ரகுமானின் இசையை விட குழந்தைகளின் அழும் குரல் ஆங்காங்கே கேட்டது!
மேலும் கூட்டத்தினர் வந்து கொண்டே இருந்ததால் பலர் கச்சேரியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், உயிர்தான் முக்கியம் என கருதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டனர். இன்னும் பலர் கச்சேரி நடந்த இடத்தை அடைய முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். இதனால் பலர் வீடு திரும்பிவிட்டனர்.
இந்த கச்சேரி குறித்து பொதுமக்கள் கூறுகையில் டிக்கெட் வைத்திருந்தவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை, ஒரு டிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உள்ளே சென்றனர். அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் டிக்கெட்டை சோதிக்காமல் எந்த பிரிவு சொல்கிறார்களோ அந்த பிரிவு இருக்கைக்கு அனுப்பிவிட்டனர்.
அவர்களுக்கு தேவையான காசு வசூலாகிவிட்டது. இனி ரசிகர்கள் அந்த கச்சேரியை பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன, உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து வந்துவிட்டோம். இது போன்ற மோசமான இசைக்கச்சேரியை நடத்தவே கூடாது. ஏ.ஆர் ரகுமான் அந்த விழா ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமானோ இசைக் கச்சேரி வந்துவிட்டு பார்க்க முடியாமல் திரும்பியோர் தங்களது டிக்கெட்டுகளின் நகல்களை இணையதள முகவரிக்கு அனுப்பலாம். என்னுடைய குழுவினர் உங்களை தொடர்பு கொள்வார்கள் என தெரிவித்திருந்தார். இதற்கான இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இசைக் கச்சேரி குளறுபடி தொடர்பாக ஏ.ஆர். ரகுமானுக்கு இதுவரை 4000 பேர் மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அனைவருக்கும் பணம் திருப்பி செலுத்தப்படும் என ஏ.ஆர். ரகுமானின் உதவியாளர் செந்தில் வேலன் தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் ரகுமான் ஏன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும், விழாவை ஏற்பாடு செய்தவர் மீதுதானே தவறு, அவர்தானே பணத்தை திருப்பி தர வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுவரை இசைக் கச்சேரியை பார்க்க முடியாமல் திரும்பியதாக 4000 பேர் ரகுமானுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அவர்களில் 400 பேருக்கு இதுவரை பணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கலைநிகழ்ச்சியை பார்த்தனரா இல்லையா என்பதை ஆய்வு செய்து அதில் பார்க்காதவர்களுக்கு மட்டும் பணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications