சென்னையில் பெரும் ஷாக்.. மாமுல் கேட்டு ஹோட்டல் ஊழியரை ரத்தம் வரவர அடித்த ரவுடிகள்.. அண்ணாமலை கண்டனம்
சென்னை: சென்னை திருமங்கலத்தில் மாமூல் கேட்டு உணவக மேலாளர் ரவுடிகளால் தாக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செவ்வாய்கிழமைமை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பெட்ரோல் குண்டுகள், மது மற்றும் போதையில் பட்டப்பகலில் நடந்த கொலைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தெருக்கள், குண்டர்கள் கும்பல் அதிகரிப்பு ஆகியவை தான் தமிழகத்தில் ஊழல் திமுக அரசின் வெற்றியாகும்.

சென்னை திருமங்கலத்தில் பாதுகாப்பு பணம் தர மறுத்ததால் உணவக மேலாளரை ரவுடிகள் அடித்து உதைத்திருக்கிறர்கள். உணவக உரிமையாளரிடமிருந்து புகார் அளித்தும், அந்த தாக்குதலை நடத்தியவர்களை காவல் துறை இதுவரை கைது செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இது போன்ற செயல்கள் மூலம் மக்களைப் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு திமுக அரசு தள்ளி உள்ளது" இவ்வாறு அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அதே வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்..
ஹோட்டல் மேலாளரைத் தாக்கிய ரவுடிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிச் செயல்படும் தைரியத்தை எதையும் கண்டுகொள்ளாத திமுக அரசும், காவல்துறையும் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்..
Petrol bombs, broad daylight murders under the influence of alcohol & drugs, unsafe streets for women and a rise in goondaism are the successes of the Corrupt DMK govt.
— K.Annamalai (@annamalai_k) November 14, 2023
In Tirumangalam, Chennai, rowdies have beaten up an eatery manager for refusing to pay protection money.
It… pic.twitter.com/GQgnPe5iu7












Click it and Unblock the Notifications