கேளம்பாக்கம் அருகே 35-வது மாடியில் இருந்து குதித்த மாணவன்... பிரபல அடுக்குமாடியில் என்ன நடந்தது?
சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூரில் 40 மாடிகள் கொண்ட பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள 35-வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரபல தொழிற்சாலையில் பணிபுரியும் தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவரின் மகன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரில் 40 மாடிகள் கொண்ட பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 35-வது மாடியில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த யங்கியூ லிம் என்பவர் தனது மனைவி சுஜாங் சிங், மகன் சினோ லிம் (வயது 15) ஆகியோருடன் வசித்து வருகிறார். யங்கியூ லிம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். யங்கியூ லிம் கடந்த வாரம் தென்கொரியா சென்றுள்ளார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகன் மட்டும் இருந்துள்ளனர். சினோ லிம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி வரை சினோ லிம் தனது தாயுடன் பேசிவிட்டு தூங்கச் சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் மாணவன் சினோ லிம் தான் வசிக்கும் 35-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். சத்தம் கேட்டு காவலாளி சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சிறுவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இது சம்பந்தமாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவன் கொரிய மொழியில் எழுதிய கடிதம் ஒன்றை வீட்டில் போலீசார் கைப்பற்றினர். அதில் பெற்றோர்கள் சரியாக கவனிப்பதில்லை எனவும் தென் கொரியாவில் வசிக்கும் சகோதரியை மட்டும் பாசமாக கவனிக்கின்றனர் என வருத்தத்துடன் எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். பெற்றோர் தன்னை சரியாக கவனிப்பது இல்லை என கூறி பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications