கோயம்பேட்டில் வாடகைக்கு வீடு விட்டவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்.. சிக்கிய ஜோடி
சென்னை: சென்னையில் வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கவனமாக இல்லாவிட்டால் பணம், நகையை பறி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாகவீடுகளில் சிசிடிவி கேமரா உள்ளேயும், வெளியேயும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி செய்துவிட்டால், நீங்கள் அசந்த நேரத்தில் உங்கள் பணத்தை யாராவது திருட முயன்றால், அல்லது திருடி சென்றால் கண்டுபிடித்துவிட முடியும். அப்படித்தான் வீட்டின் உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் திருடிய ஆட்டோ டிரைவர், தனது தோழியுடன் கைது செய்யப்பட்டார்.
வாடகை வீடுகளில் சில தர்ம சங்கடமான நிகழ்வுகளை அடிக்கடி இப்போது மக்கள் சந்திக்கிறார்கள். திடீரென வீட்டில் வைத்துள்ள பணம் காணாமல் போய்விடும். சிறுக சிறுக பணம் காணாமல் போயிருக்கும். சில நேரங்களில் நகையே மாயமாகி இருக்கும். வாடகைக்கு குடியிருக்கும் ஒரு சிலர் சபலத்தில் திருடுவதே இதற்கு காரணமாக இருக்கிறது. சில நேரங்களில் வீட்டின் உரிமையாளர், வாடகை வீட்டில் நுழைந்து திருடிய சம்பவங்களும் நடந்துள்ளது. வீடுகளில் டிவி இருப்பதை போல சிசிடிவி இருப்பது தான் உங்களை காப்பாற்றும். சென்னையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

நெற்குன்றம் வாடகை வீடு
சென்னை நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்த 40 வயதாகும் கார்த்திகேயன் என்பவர் 2 மாடிகள் கொண்ட வீட்டின் தரைத்தளத்தில் 'டிஷ்யூ' பேப்பர் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். வீட்டின் 2-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள வீட்டில் ஆட்டோ டிரைவரான 25 வயதாகும் நிதீஷ்குமார் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.
வீட்டில் 9 லட்சம் திருட்டு
கடந்த டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை காரணமாக கார்த்திகேயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.9 லட்சம் மற்றும் வெளிநாட்டு பணம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் தெரிந்தவர்களே கை வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார். அவர்கள் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள்.
ஆட்டோ டிரைவர் தோழியுடன் கைது
அதில், அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் ஆட்டோ டிரைவர் நிதிஷ்குமார், தனது தோழியான 21 வயதாகும் சிநேகா சம்பத்குமார் என்பவருடன் சேர்ந்து கார்த்திகேயன் வீட்டில் பணத்தை திருடியது தெரியவந்தது. சம்பவத்தன்று கார்த்திகேயன் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட நிதிஷ்குமார், அந்த சாவியை எடுத்து கதவை திறந்து கைவரிசை காட்டியது தெரிந்தது. நிதீஷ் குமார், அவரது தோழி என 2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ரூ.66 ஆயிரம் பணம் மற்றும் ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications