சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலுக்கு பின் கூட்டணி.. பாஜகவிற்காக தூது வந்த முக்கிய தொழிலதிபர்.. திமுக என்ன சொன்னது தெரியுமா?

லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர்களுடன் முன்னணி தொழிலதிபர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி பாஜவுக்காக தூது வந்த தொழிலதிபர்?- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர்களுடன் முன்னணி தொழிலதிபர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    லோக்சபா தேர்தல் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. மே 23ம் தேதி இந்த தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் என்ன மாதிரியான முடிவுகள் வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் பெரும்பாலும் இந்த தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகிறார்கள்.

    பகைக் கூட்டத்தை கிழித்தெறிவோம்.. மோசடி அரசுகளை வீட்டுக்கு அனுப்புவோம்.. புதுச்சேரியில் ஸ்டாலின் பகைக் கூட்டத்தை கிழித்தெறிவோம்.. மோசடி அரசுகளை வீட்டுக்கு அனுப்புவோம்.. புதுச்சேரியில் ஸ்டாலின்

    என்ன பேச்சு

    என்ன பேச்சு

    அதனால் மாநில கட்சிகள் மனது வைக்கும் நபர்தான் பிரதமர் ஆக முடியும். திமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிக்கிறது என்பதை பொறுத்தே ஆட்சி அமையும். இந்த நிலையில்தான் திமுக தலைவர்களை முக்கியமான தொழிலதிபர் ஒருவர் சந்தித்து பேசி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

    என்ன சந்திப்பு

    என்ன சந்திப்பு

    பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் அந்த தொழிலதிபர் சில நாட்களுக்கு முன் திமுக தலைவர்களை சந்தித்து, திமுக - பாஜக கூட்டணி குறித்து பேசி உள்ளார். அதிமுக கூட்டணியில் நிறைய இடங்கள் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டால், திமுகவை கூட்டணிக்குள் அழைக்க பாஜக திட்டமிட்டு இவரை தூது விட்டதாக கூறுகிறார்கள்.

    லோக்சபா தேர்தல்

    லோக்சபா தேர்தல்

    முக்கியமாக லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் அப்போது திமுகவை அழைப்பதற்காக இப்போதே பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். சென்னையில் தனியார் ஹோட்டலில் இந்த பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தயார் என்று கூட இந்த கூட்டணியில் பேசப்பட்டு இருக்கிறது.

    திமுக கோரிக்கை

    திமுக கோரிக்கை

    ஆனால் திமுக இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வருகிறது. அதே தொழிலதிபரிடமும் திமுக இதை நேரடியாக தெரிவித்துவிட்டதாக கூறுகிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களிடமும் திமுக தகவல் தெரிவித்து இருக்கிறது. இதனால்தான் தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஸ்டாலின் வெளிப்படையாக கூறினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    English summary
    A top position industrialist met DMK leaders to get support for the BJP after the poll, If the party failed to get a majority. But DMK nods no to the industrialist: Sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X