பால் குடித்துவிட்டு தூங்கிய பெண் குழந்தை பலி.. மூச்சுத்திணறலா? பெண் சிசு கொலையா? போலீஸ் விசாரணை
சென்னை: கொருக்குப்பேட்டையில் பால் குடித்துவிட்டு தூங்கிய 2 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை சிபி ரோடு ரயில்வே காலனி குடிசை பகுதியை சேர்ந்தவர் மணி (28). இவருடைய மனைவி தேவி (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் இவர்களுக்கு 3 ஆவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் குழந்தை அழுததால் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு
காலையில் எழுந்து குழந்தையை குளிக்க வைப்பதற்காக தூக்கியபோது குழந்தை எந்தவித அசைவும் கொடுக்காததால் பதறியடித்து கொண்டு உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழப்பு
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆர்.கே. நகர் போலீஸார் விரைந்து குழந்தையின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

காரணம்
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே குழந்தையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

பரபரப்பு
பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதா அல்லது ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருக்க மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்ததால் திட்டமிட்டு கொல்லப்பட்டதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொருக்குப்பேட்டை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications