சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவரா? பாஜகவில் ஒதுக்கப்பட்ட "இளம் புள்ளி".. ரொம்ப அப்செட்டாமே.. குலுங்கும் கமலாலயம்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் இருக்கும் இளம் தலைவர் ஒருவர் கட்சி தலைமை மீது அப்செட்டில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவில் தற்போது உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. கட்சிக்குள் சீனியர் நிர்வாகிகள் மதிக்கப்படுவது இல்லை என்ற புகார்கள் வெளிப்படையாக வைக்கப்பட்டு வருகிறது.

பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்களுக்கு இரண்டு குழுக்கள் இருப்பதே காரணம். ஒன்று அண்ணாமலை ஆதரவு குழு, இன்னொன்று அண்ணாமலை எதிர்ப்பு குழு என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை மேல அவ்வளவு அன்பா? அட அதெல்லாம் இல்லங்க.. இணையத்தைக் கலக்கும் திருச்சி சூர்யா மீம்ஸ்! அண்ணாமலை மேல அவ்வளவு அன்பா? அட அதெல்லாம் இல்லங்க.. இணையத்தைக் கலக்கும் திருச்சி சூர்யா மீம்ஸ்!

பாஜக குழு

பாஜக குழு

பாஜக நிர்வாகிகளுக்கு இடையே இந்த மோதல் கடந்த மாத தொடக்கம் வரை.. புகை மூட்டமாகவே இருந்தது. ஆனால் காசி தமிழ் சங்க விழாவிற்கு காயத்ரி ரகுராம் அழைக்கப்படாததில் இருந்துதான் உட்கட்சி பூசல் மொத்தமாக வெளியே தெரிய தொடங்கியது. அண்டை மற்றும் வெளிமாநில தமிழர் நலப்பிரிவு தலைவராக இருந்தும் கூட இவரை வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழர் தொடர்பான நிகழ்விற்கு அழைத்து செல்லாதது கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து காயத்ரி அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வைக்க தொடங்கினார்.

சீனியர்

சீனியர்

கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கு மதிப்பு இல்லை. சீனியர்களை புதியவர்கள் மதிப்பது இல்லை. கட்சியில் சீனியர்களை சிலர் கலாய்க்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் சீனியர்களை கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒரு குழு இயங்கிக்கொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பாஜக சீனியர்களை குறி வைத்து விமர்சனம் செய்கிறார்கள் என்றெல்லாம் காயத்ரி ரகுராம் கடுமையான விமர்சனங்களை அடுக்கி வந்தார். அதன்பின்பே கட்சியில் இருந்தும் காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இந்த நிலையில்தான் பாஜகவில் இருக்கும் இளம் தலைவர் ஒருவர் கட்சி தலைமை மீது அப்செட்டில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் இளம் தலைவர் என்றாலும் ஜூனியர் கிடையாது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட இவர் போட்டியிட்டார். சென்னையில் கொஞ்சம் பிரபலமாக இருக்கும் பாஜக நிர்வாகி ஆவார். இளம் தலைவர் என்றாலும் பாஜகவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலையில்தான் பாஜகவில் கடந்த சில மாதங்களாக இவர் அடியோடு ஒதுக்கப்பட்டுவிட்டார்.

ஒதுக்கிவிட்டனர்

ஒதுக்கிவிட்டனர்

இவரை பெரிதாக நிகழ்ச்சிகள் எதற்கும் அண்ணாமலை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி வரும் போது முன்பெல்லாம் இவர் விமான நிலையத்தில் இருப்பார். ஆனால் கடந்த 2 முறையும் பிரதமர் வந்த போது இவர் விமான நிலையம் செல்லவில்லை. அதேபோல் கட்சி கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. பெரிதாக கட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தலைகாட்டவில்லை. இந்த நிலையில்தான் இவரை அண்ணாமலை அடியோடு ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இளம் தலைவர்

இளம் தலைவர்

இவர் இளம் தலைவர். மற்றும் பாஜக டாப் தலைகள் இடையே கொஞ்சம் பிரபலமாகவும் இருந்தார். சட்டசபை தேர்தலில் கணிசமான வாக்குகளையும் வாங்கினார். இந்த நிலையில்தான் அண்ணாமலை அவரை ஓரம்கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்செட் ஆன அந்த நிர்வாகி என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. எல் முருகன் இருந்த வரை எனக்கு நல்ல சப்போர்ட் இருந்தது. இப்போது அப்படி இல்லை என்ற அதிருப்தியில் அந்த நிர்வாகி இருக்கிறாராம்.

English summary
A vibrant young leader is upset in BJP after so many internal issue under Annamalai .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X