சென்னையில் என்ன சார் பித்தலாட்டம் இது.. அண்ணன் பெயரில் தம்பி செய்த தரங்கெட்ட வேலை.. போலீஸ் தேடுது
சென்னை: என்ன சார் பித்தலாட்டம் இது.. அண்ணன் பெயரை சொல்லி ஆள்மாறட்டம் செய்து சிறை தண்டனையில் இருந்து தப்பி உள்ளார் தம்பி ஒருவர். அதனை கண்டுபிடித்த போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
குற்ற செயல்களை செய்துவிட்டு, தன் பெயருக்கு பதில் அண்ணனின் பெயரை குறிப்பிட்ட நபரு பித்தலாட்டம் செய்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு போன போது சிக்கியுள்ளார். தலைமறைவான அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பழனி என்பவர், அவருடைய மனைவி கொடுத்த புகாரின்பேரில் கடந்த 2009-ம் ஆண்டு கோடம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தார்கள். அந்த வழக்கில் பழனி கைது செய்யப்பட்டார்.
அப்போது, தனது உண்மையான பெயர் பழனி என்பதை மறைத்து, போலியான அடையாள அட்டையை சமர்பித்து, தனது அண்ணனின் பெயரான பன்னீர் செல்வம் என்பதை தன்னுடைய பெயராக போலீசில் பதிவு செய்திருக்கிறார். பழனியின் இந்த பித்தலாட்டம் உண்மை என்றே போலீசாரும் நம்பி உள்ளனர்..
நீதிமன்றத்திலும் பன்னீர் செல்வம் என்றே வழக்கு பதிவாகி விட்டது. இந்த வழக்கில் சென்னை மகிளா கோர்ட்டு, பழனிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. நீதிமன்ற தீர்ப்பிலும் பழனியின் பெயர் பன்னீர் செல்வம் என்று பதிவாகியது. இந்நிலையில் மேல்முறையீடு காரணமாக பழனிக்கு அளித்த தண்டனை 3 ஆண்டாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பழனி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம், ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உடனடியாக மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பழனிக்கு உத்தரவிட்டது. ஆனால், பழனி நீதிமன்றத்தில் சரணடையாமல் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து அவரை கைது செய்ய மகிளா நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்த பழனியை கைது செய்ய கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பன்னீர் செல்வம் என்ற பெயரில் தலைமறைவாக இருந்த பழனியை தீவிரமாக தேடி வந்தார்கள். பழனியின் அண்ணனான உண்மையான பன்னீர் செல்வம், காஞ்சீபுரத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். அவரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அப்போதுதான் போலீசாருக்கு பழனியின் பெயர் மாற்று பித்தலாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, தலைமறைவாக உள்ள பழனியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம்












Click it and Unblock the Notifications