ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.. திருத்தம் செய்துட்டீங்களா? கடைசி தேதியை கவனியுங்க
சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது. இதை வாய்ப்பினை பயன்படுத்தி, ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்தியாவிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டுகள் அவசியமாகின்றன.. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு அவசியம்.

ஆதார் அட்டைகள்: எனினும், பலர் 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டைகளே வைத்திருப்பார்கள்.. இந்த பழைய கார்டினை அப்டேட் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..
அந்தவகையில், ஆதார் அட்டையில் உங்களது தகவல்கள் எல்லாமே தற்போதைய அப்டேட்டுகளாக இருக்க வேண்டும். இதற்காகவே, உங்களது தகவல்களை புதுப்பித்து வைத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆதார் அட்டைகள் எந்தவிதமான பிழைகளுடனும் இருக்கக்கூடாது. பிழைகள் இருந்தாலும், அரசின் உதவியை பெற முடியாது என்பதால், தவறுகளை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும்.
கட்டணம் என்ன: 10 வருடங்கள் பழமையான ஆதார் கார்டைப் புதுப்பிக்க வேண்டுமானால், எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான காலக்கெடு செப்டம்பர் 14ம் தேதியே முடிவடைந்துவிட்டது என்றாலும், இப்போது டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாகவோ அல்லது வேறு முகவரி இருந்தால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் ஆதாரில் உங்கள் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.. எனவே, ஆதார் கார்டுகளை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை தடுக்க, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆதார் அட்டையை அப்டேட் செய்வது கட்டாயமாகும்.. அதன்மூலம் ஆதார் கார்டு பாதுகாப்பாகவும் இருக்கும், மோசடிகளையும் தடுக்க முடியும்.
2 ஆப்ஷன்கள்: ஆதார் கார்டை அப்டேட் செய்ய 2 ஆப்ஷன்கள் உள்ளன.. My Aadhaar வெப்சைட்டிற்குள் நுழைந்து அப்டேட் செய்து கொள்ளலாம். அல்லது, ஆதார் சேவை மையத்துக்குச் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். அப்படி பொதுச்சேவை மையத்துக்கு செல்வதாக இருந்தால், பெயர், போட்டோ, செல்போன் நம்பர், முகவரி போன்ற விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே ஆன்லைனில் புதுப்பிப்பதாக இருந்தால், இலவசமாக செய்து கொள்ளலாம்.
ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு முடிந்ததும், ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ஆதாரை புதுப்பிப்பதற்கு கட்டணம் விதிக்கப்படும். ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய 100 ரூபாயும், மக்கள்தொகை தரவுகளுக்கு 50 ரூபாயும், ஆன்லைனில் ஆதார் பதிவிறக்கத்திற்கு 30 ரூபாயும், முகவரியைப் புதுப்பிக்க 25 ரூபாயும் வசூலிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 14ம் தேதிக்குள் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் புதுப்பிக்க:
- https://myaadhaar.uidai.gov.in/portal e என்ற வெப்சைட்டில் ஆதார் OTP சரிபார்ப்பு மூலம் உள்நுழைய வேண்டும்.
- 'Update Demographic Data' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, நிலையை சரிபார்க்க வேண்டும்.
- ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பரில் பெறப்பட்ட OTP நம்பரை உள்ளிட வேண்டும்.
- Update Demographic Data என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களது அப்டேட் தொடர்பான ஆவணங்களை அப்லோடு செய்யலாம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications