முக்கியம்.. இன்று பள்ளிகளிலேயே நடக்கும் ஆதார் முகாம்.. மாணவர்களுக்கான சூப்பர் வசதி.. நோட் பண்ணுங்க
சென்னை: இன்று பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம் நடத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை முகாம்களில் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆதார் தொடர்பான எல்லா மாற்றங்களையும் இதில் செய்யலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஒரு நாள் முகாமாக இல்லாமல் சில நாட்களுக்கு இந்த முகாம்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார்.
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இப்படிப்பட்ட ஆதாரிலேயே 4 வகையான ஆதார் உள்ளன. ஒன்று சாதாரண ஆதார்.
ஆதார் லெட்டர் வகை: இது ஒரு லெட்டர் அடிப்படையிலான லேமினேட் செய்யப்பட்ட ஆதார் கடிதம் ஆகும். இதில் ஆதார் அட்டை கொடுக்கப்பட்ட வெளியிடப்பட்ட தேதி மற்றும் QR குறியீடு இருக்கும். புதிய பதிவு அல்லது பயோமெட்ரிக் மாற்றம், மொத்தமாக ஆதார் புதுப்பிப்பு செய்யப்பட்டால், புதிய ஆதார் அட்டை சாதாரண தபால் மூலம் மக்களுக்கு அனுப்பப்படும். ஆதார் கடிதத்தை அது வரை தாற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம் இந்த ஆதார் கடிதம் இருந்தால் மட்டுமே தபாலில் வரும் கார்டை வாங்க முடியும்.
eAadhaar: eAadhaar என்பது ஆதாரின் மின்னணு வடிவமாகும். இது UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டது. இதில் பாதுகாப்பான QR குறியீடு இடம்பெற்று இருக்கும். அதேபோல் ஆன்லைனில் திறக்க கடவுச்சொல் கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் eAadhaar/masked eadhaar ஐ எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு ஓடிபி வரும். eAadhaar/masked eAadhaar பொதுவாக ஆதார் கார்டில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டும்.
ஆதார் பிவிசி கார்டு: ஆதார் பிவிசி கார்டு என்பது UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதாரின் சமீபத்திய வடிவமாகும். எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் வலிமையானது. PVC-அடிப்படையிலான ஆதார் அட்டையானது டிஜிட்டல் முறை மூலம் கையொப்பமிடப்பட்ட ஆதார் ஆகும். இது டேம்பர் ப்ரூஃப் கொண்டது. அதேபோல் தண்ணீரில் விழுந்தாலும் வீணாகாது.
ப்ளூ ஆதார்: உங்கள் வீட்டில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு என்று தனியாக நீல நிற ஆதார் அட்டை எடுக்கலாம்.
நீல நிற ஆதார் அட்டை என்பது பால ஆதார் அட்டை என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக குறிப்பாக வழங்கப்படும் ஆதார் அட்டை ஆகும். பெரியவர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இது நீல நிறத்தில் உள்ளது.
நீல நிற ஆதார் அட்டை ஏன் வேறுபட்டது? : பயோமெட்ரிக் தரவு (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) சேகரிக்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையைப் போலல்லாமல், நீல ஆதார் அட்டைக்கு குழந்தையிடமிருந்து எந்த பயோமெட்ரிக் தகவலும் தேவையில்லை.
ஏனெனில் சிறு குழந்தைகளிடமிருந்து பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது சவாலானது மற்றும் நம்பமுடியாதது. அதற்குப் பதிலாக, குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படத்தின் அடிப்படையில் இந்த கார்டு உருவாக்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது: இதற்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிடவும், உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைக் கண்டறியவும். UIDAI இணையதளத்தில் (https://uidai.gov.in/) மையங்களின் பட்டியலைக் காணலாம்.












Click it and Unblock the Notifications