நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே அடையாள அட்டை.. ஆதார் கார்டு போல அபார் கார்டு.. பாஜக பிளான்
சென்னை: இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் அடையாள எண் வழங்கப்படும்.

ஆதார் அட்டை போல மாணவர்களின் முன்னேற்றங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டைக்கு அபார் - APAAR அடையாள அட்டை என்று பெயர் வைக்கப்பட உள்ளது என்று பாஜக கூறியுள்ளது.
ஆதார் என்பது 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும். இது மக்களின் பயோமெட்ரிக் மற்றும் அடையாள தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்திய குடிமக்கள் மட்டும் பெறக்கூடிய அடையாள அட்டையாகும். இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 2009 இல் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ ஆணையமான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) இந்த அட்டை தரவுகள் அனைத்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஆதார் கட்டாயம்: இந்தியாவில் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் ஆகும். ஆதார் அட்டையை பல்வேறு சேவைகளுடன் இணைக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன. அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களை சென்று சேர்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு வசதியாக, சேவைகளை கண்காணிப்பதற்கு வசதியாக, முறைகேடுகளை தடுப்பதற்கு வசதியாக இந்த ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஜூலை 2014 இல் அரசு அலுவலகங்களில் ஆதார்-இயக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் பயோமெட்ரிக் முறை ரேஷன் கடைகள் தொடங்கி சிம் கார்ட் வாங்குவது வரை பல இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து வெளியுறவு அமைச்சகம் சில வருடங்களுக்கு முன் முடிவெடுத்தது.
அதேபோல் ரேஷன் அட்டை, பிஎப் கணக்கு, வங்கி கணக்கு, பான் அட்டை, மின்சார சேவை என்று பல சேவைகளில் ஆதார் அட்டை கட்டாயம் ஆகி உள்ளது. 2020 ஆம் ஆண்டில், UIDAI ஆனது ஹாலோகிராம்கள், மைக்ரோ டெக்ஸ்ட், Ghost படங்கள், கில்லோச் வடிவங்கள், கண்ணுக்கு தெரியாத லோகோக்கள் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் PVC ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது PVC ஆதார் அட்டையை UIDAI இன் இணையதளத்தில் எந்த ஆதார் வைத்திருப்பவரும் ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படி ஆதார் அட்டை மக்களுடன் மக்களாக இணைந்துவிட்டது.
அபார் அட்டை: இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அட்டைக்கு அபார் - APAAR அடையாள அட்டை என்று பெயர் வைக்கப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் அடையாள எண் வழங்கப்படும்.
மாணவர்கள் எங்கே படிக்கிறார்கள், கல்லூரி செல்கிறார்களா? படிப்பை பாதியில் நிறுத்துகிறார்களா? என்பதை இதன் மூலம் கண்காணிக்க முடியும். பள்ளி இடைநிற்றலை இதனால் தடுக்க முடியும். மத்திய அரசு மூலம் இந்தியா முழுக்க அறிமுகப்படுத்த உள்ளது. ஆதார் அட்டை போல மாணவர்களின் முன்னேற்றங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கை: பாஜகவின் லோக்சபா தேர்தல் அறிக்கை 2024 வெளியிடப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் 'சங்கல்ப் பத்ரா' பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டு உள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கை குழு தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளர் நிர்மலா சீதாராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பியூஸ் கோயல் இந்த குழுவில் பங்கேற்றனர். 27 பேர் கொண்ட குழு இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது .
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்:
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும்.
மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே மோடியின் கேரண்டி.
2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்..
2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்
பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்
மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம், அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்
புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம்
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்
இது போக வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் சேவை. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண். தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை. தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும்
கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் எரிவாயு விநியோகம்
மெட்ரோ ரயில் சேவைகள் வந்தே பாரத் மெட்ரோ சேவைகளாக தரம் உயர்த்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications