நெருங்கிய காலக்கெடு.. தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு.. ஆதாரை இணைச்சிட்டீங்களா? ரொம்ப முக்கியம்
ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும்
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான கால அவகாசம் நாளை மறுநாளோடு முடிவடைகிறது.
மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் நிலவி வருகிறது. ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், மின்சார கணக்கில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்படுவது தவறு.
ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை. மற்றபடி நேரில் கட்டணம் செலுத்த ஆதார் விவரங்கள் தேவை இல்லை.

எப்படி செய்வது
மானியம் பெறும் பயனர்களை கண்டறிய ஆதார் விவரம் தேவை என்பதால், அதற்காக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்காக ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் நேரில் முகாம் மூலமும் இணைக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம் கட்டணம் இன்றி இயங்கி வருகிறது. ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களை கொடுக்கலாம்.

எளிதாக செய்யலாம்
இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவதில் சிலருக்கு மட்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எளிதாக ஆன்லைன் மூலம் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம். https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற பக்கத்தில் இதை எளிதாக மேற்கொள்ள முடியும்.இதற்கான கால அவகாசம் நாளை மறுநாளோடு முடிவடைகிறது.

காலஅவகாசம்
ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம்உள்ளது. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் இருக்கின்றனர். இதுவரை 2.25 கோடி பேர் மட்டுமே ஆதாரை இணைந்துள்ளனர். முன்னதாக இதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜனவரி 31 வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிய உள்ள நிலையில் ஆதார் இணைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

காலக்கெடு
மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க யாரும் பணம் வாங்க கூடாது. அதிகாரிகள் யாரும் மக்களிடம் கட்டணம் வசூலிருக்க கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களை கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம்.

வாடகை
ஆனால் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது. அதாவது வாடகை வீட்டில் இருப்பவர் ஆதார் விவரங்களை கொடுத்தாலும், ஓனர் பெயர்தான் கணக்கின் பெயரில் இருக்கும். நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். அதாவது நீங்கள் வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கையும் நீக்க முடியும். புதிதாக அந்த வீட்டிற்கு வருபவர்கள் கணக்கை சேர்த்துக்கொள்ள முடியும். இதுதான் விதி. இதற்காக நேரடி முகாம்கள் நடந்து வருகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications