ஆதார் கார்டு.. வேற வழியில்லை.. உங்க அக்கவுண்ட் கேன்சலாகிரும்.. ரேஷனும் வாங்க முடியாது.. இன்றே கடைசி
சென்னை: ரேஷன் கார்டை, ஆதார் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது.
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கார்களை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு. அந்த அளவுக்கு ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது.

ஆதார் கார்டு பயன்கள்: இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல.. மக்கள் நலத் திட்டங்களில் உதவிகளைப் பெறுவதற்குக்கும் ஆதார் அவசியம். சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும்.
ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒரே நாடு ஒரே ரேஷன்: ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கிக் கொள்ளலாம்... அதுவும் இல்லாமல், 1000 ரூபாய் உரிமைத்தொகையை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது.. மகளிர் உரிமைத்தொகை மட்டுமல்லாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு போன்ற உதவிகளும் இந்த ரேஷன் கார்டுகள் மூலம்தான் கிடைக்கின்றன.
இணைப்பு கட்டாயம்: அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர்.
ஆதார் அட்டை: எனவேதான், ரேஷன் கார்டுடன் ஆதார் அணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, கடந்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. அப்படி இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அத்துடன், இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், இந்த கூடுதல் அவகாசம் தரப்பட்டும்கூட, ஆதார் எண்ணை, ரேஷன் கார்டுடன் சிலர் இணைக்காமல் இருந்தனர்.. எனவே, மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு தரப்பட்டது.. அதன்படி, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை மறுபடியும் அவகாசம் தரப்பட்டது..
இந்த காலக்கெடுவுக்குள் இணைத்துவிட்டால், உங்களுடைய ரேஷன் கார்டு ரத்தாவதை தடுக்கவும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்தவகையில், இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது. இதுவரை யாராவது இணைக்காமல் இருந்தால், உடனடியாக இன்றே ஆதார் + ரேஷன் கார்டினை உடனடியாக இணைக்க வேண்டும் என்றும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுளள்து.
ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி இணைப்பது
1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. இப்போது நீங்கள் 'Start Now' என்பதைக் கிளிக் செய்க.
3. இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும்.
4. இதற்குப் பிறகு 'Ration Card Benefit' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
6. அதை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.












Click it and Unblock the Notifications