எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கீங்க பார்த்தீங்களா.. ஆதவ் அர்ஜுனா தவறால்.. விஜய் கண்ணீர் விடாத குறை
சென்னை: தமிழக அரசியல் களம் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான நிலையில் இருந்து பெரும் பரபரப்பில் உள்ளது. அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆதரவுடன் முதலமைச்சர் பதவிக்கு முயற்சி செய்வதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது பலருக்கும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.
இந்தக் கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்கு அடுத்த அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக செய்த தவறுதான் தற்போது திமுக - அதிமுக கூட்டணி உருவாக்கும் பேச்சுக்கள் எதிரொலிக்க காரணமாகியுள்ளது.

ஆதவ் அர்ஜுனா செய்த தவறு..
இந்தச் சூழலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) செய்த தவறும் தற்போதைய சிக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தவெகவின் மூத்த தலைவர் ஆதவ் அர்ஜுனா, விஜய்யை காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஏற்றுக்கொள்ளவும், ஆளுநரை சந்திக்கவும் வற்புறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளையில் அனுபவசாலியான செங்கோட்டையன் இந்த முடிவின் விளைவுகளை முன்கூட்டியே எச்சரித்திருந்தும், ஆதவ் அர்ஜுனா அதைப் பொருட்படுத்தவில்லை டிவிட்டரில் தகவல் பரவி வருகிறது.
அதாவது தவெக தனிப்பெரும் கட்சி என்ற பெயரில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம், அனைத்து எம்எல்ஏ-க்களிடம் ஆதரவு இருப்பதாக காரணம் காட்டி ஆட்சி அமைத்த பின்பு சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கலாம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தவெக, காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் பெயர்களையும் சேர்த்து வழங்கியதால் தனி பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோராமல், கூட்டணி அடிப்படையில் ஆட்சிக்கு விஜய் உரிமை கோருகிறார் என்று ஆளுநர் புரிந்துக்கொண்டு மீதமுள்ள 5 எம்எல்ஏக்களின் ஆதரவு எங்கே? என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேட்டுள்ளார்.
இதன் காரணமாகவே 2வது முறை கவர்னர் சந்திப்பில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. ஆனாலும் ஆளுநர் கேட்ட கேள்விகள், முழுமையாக பெரும்பான்மை கொடுக்க முடியாத நிலை ஆகியவை ஆட்சி அமைக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தது.
மூத்த தலைவர், அரசியலில் அனுபவமிக்க செங்கோட்டையன் அட்வைஸை கேட்காமல் விஜய் எடுத்த முடிவின் காரணமாக விஜய் தற்போது முதல்வர் ஆக முடியாமல் தவிக்கிறார். தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையிலும், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கும் கனவு தள்ளிப்போகிறது.
தவெக எம்எல்ஏக்கள் ராஜினாமா?
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், தவெகவின் அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலைப்பாடு கட்சியின் உள்ளேயும் வெளியேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புஸ்ஸி ஆனந்தின் அறிவுரை
இந்த முக்கிய கட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் எம்எல்ஏக்களுடன் பேசியுள்ளார். "எதிர்கட்சிகளை தவெக-வில் இருந்து வெளியேற கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் விஜய் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நம்பிக்கையுடன் இருங்கள். எதையும் நினைத்து குழம்ப வேண்டாம். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள், நல்லதே நடக்கும்" என்று அவர் நம்பிக்கை கொடுத்துள்ளார்.
மேலும், "விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுடன் விரைவில் இணைவார்கள், உறுதியாக இருங்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications