பால் விலை உயர்வா? இனி ஆரஞ்சு நிற பாக்கெட்டு இல்லையா.. ஆவின் நிறுவன அதிகாரி விளக்கம்
சென்னை: ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட பால் இன்று முதல் ஊதா நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைகாட்சிகளில் 200 மி.லி பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பால் இன்று முதல் Violet நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கீழ்கண்ட தெளிவுரை வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும் 33700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது புதிய பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நெல்லை ஆவின் மூலம் Cow Milk அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வகை Cow Milk 200 ml Delite எனும் பெயரில் ரூ 10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் ஆவின் டிலைட் 500 மிலி பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M.) நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மிலி பாக்கெட்டுகளை அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ 10 உயர்ந்தது. 5 லிட்டர் கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ 210 க்கு விற்பனையாகி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரூ 10 அதிகரித்து ரூ 220 க்கு விற்பனையானது. ஆவின் பால் விலை உயர்வால் டீக்கடை, உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது பிங்க் நிறத்தில் விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் ஆவின் நிர்வாகம் மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications